
அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா, 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார்.
இந்த படத்தில் இளமை தோற்றத்தில் அஜித் நடிக்கிறார், வடசென்னை தாதாவாக வருகிறார், என்று தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும், இது பற்றி இயக்குனர் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடி கீர்த்திசுரேஷ் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து ஆத்மிகா, ஷரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.
317 Views
