
ஏர் இந்தியாவால் கைவிடப்பட்ட விமானம் ஒன்று முன்னாள் பணிப்பெண்ணின் கைவண்ணத்தால் இன்று கவனத்தை ஈர்க்கும் சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பணிப்பெண்ணாக இருந்த ஸ்ருதி காகர் மற்றும் அவரது கணவர் ஷிடிஸ் இணைந்து இந்த உணவகத்தை உருவாக்கியுள்ளனர்.

ஏர்பஸ் வகை ஏர் இந்திய விமானமான A320 தினமும் 150 முதல் 200 பேர் வரை வருகை தரும் உணவகமாக மாறியுள்ளது. அரியானா மாநிலம் அம்பாலா நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த உணவகம் விமானத்தில் உள்ளது போன்றே போர்டிங் பாஸ் அம்சங்களை கொண்டது.
விமான பணிப்பெண்களை போன்ற பணியாளர்கள், இந்திய, சீனா மற்றும் மெக்சிகன் உணவுகள் இங்கு வாடிக்கையாளர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ரன்வே 1 என்ற பெயரில் இயங்கும் இந்த உணவகத்தில் ஓல்டு ரம் கொண்டு தயாரிக்கப்படும் சிக்கன் வகையின் சுவை நாவில் எச்சில் ஊறச்செய்யும் வர வைக்கும் வகையில் உள்ளது

வெறும் உணவு வகைகள் மட்டுமல்ல, பைலட் அறையில் இருந்து உண்மையாகவே விமானத்தை இயக்குவது போன்ற சைமுலேட்டர்களையும் வாடிக்கையாளர்கள் விளையாடி பார்க்கலாம். வட இந்தியாவுக்கு நீங்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டால் நிச்சயமாக இந்த பறக்காத விமான உணவகத்தையும் ஒரு ரவுண்ட் அடித்து வாருங்கள்.
https://youtu.be/Inxzbs38m_k
