அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்!
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்
அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரி...









