சச்சின் – அபர்நதி நடிப்பில்ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ’டீமன்’ படத்திற்கு அதிக ஸ்கிரீன்ஸ்!
தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் - அபர்நதி நடிக்கும் ’டீமன்’ படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது!
சஸ்பென்ஸ் - த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் 'டீமன்' படத்தினை தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.
'அங்காடித்தெரு', 'அரவான்', 'காவிய தலைவன்', 'ஜெயில்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரமேஷ் பழனிவேல், ’டீமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
படத்திற்கு அதிக திரைகள் கிடைத்துள்ளது குறித்தது இயக்குநர் ரமேஷ் பழனிவேல் பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்களின் ...









