வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு  இயக்குநர் பாரதிராஜா அளித்த விருந்து!

கென்னடி கிளப்’ கபடிவீராங்கனைகளுக்கு இயக்குநர் பாரதிராஜா அளித்த விருந்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'கென்னடி கிளப்' கபடிவீராங்கனைகளுக்கு விருந்தளித்த இயக்குநர் பாரதிராஜா லல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். நேற்று முன்தினத்தோடு பாரதிராஜாவின் பகுதி முடிவடைந்த நிலையில், நேற்று அவரது இல்லத்தில் படத்தில் நடித்த நிஜ வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவில் பணியாற்றியவர்களுக்கு மதிய விருந்தளித்து உபசரித்தார். ​...
ஜுலை காற்றில் விமர்சனம்

ஜுலை காற்றில் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
நாயகன் ராஜீவ் (ஆனந்த் நாக்) ஒரு தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக பணி புரிகிறார். தனது நண்பன் திருமணத்திற்கு செல்லும் ராஜீவ், அங்கு வரும் நாயகி ஷ்ரேயா(அஞ்சு குரியன்)வை காண்கிறார். பார்த்ததும் நண்பர்களாகி விடுகின்றனர். பின், நட்பு காதலாக மாறாக, இருவரின் வீட்டு சம்மதத்தோடு திருமணம் வரை செல்கிறது. இருவருக்கும் நிச்சயம் முடிந்து விட்ட நிலையில், ராஜீவ் ஷ்ரேயாவுடன் ஒரு காதல் பிடித்தம் இல்லை என கூறி, திருமணத்தை நிறுத்தி விடுகிறார். ஷ்ரேயாவுன் பிரேக் அஃப் செய்து விடுகிறார். பின், அடுத்த நாயகி ரேவதி(சம்யுக்தா மேனன்)யை பார்த்ததும் ராஜீவிற்கு காதல் மலர்கிறது. ஏற்கனவே பிரேக் அஃப் ஆகி தனிமையில் இருக்கும் ரேவதிக்கு ராஜீவும் ஆறுதலாக இருக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. போட்டோகிராபியில் சாதனை புரிய நினைக்கும் ரேவதி, தனது வேலையில் மும்முரமாக இருக்கிறார். இதனால், இருவருக்கும் அவ்வப்போது சண்...
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS
பொன்வண்ணன்னோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அவரை விட்டு பிரிகிறார் அவரது மனைவி. இவர்களுக்கு ஒரே மகன் கெளதம்(ஹரீஷ் கல்யாண்). தந்தை பொன்வண்ணனின் அரவணைப்பில் வளர்கிறார். தாய் வருவார் வருவார் என ஏங்கி ஏங்கி அவர் மீது வெறுப்படைகிறார் கெளதம். இதனால் ஒரு முரட்டு ஆளாகவே வளர்கிறார். எதற்கெடுத்தாலும் கோபம், அடி, என நண்பர்களோடு ஊர்சுற்றி வருகிறார். பெரிய இடத்து பெண்ணாக வருகிறார் தாரா(ஷில்பா மஞ்சுநாத்). மோதலில் ஆரம்பிக்கும் இருவரது சந்திப்பு பின் காதலில் இணைகிறது. கெளதமின் முரட்டுத்தனத்தால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது. வாழ்க்கை என்ற கட்டத்திற்குள் போகும் போது தாரா சில முக்கியமான முடிவுகள் எடுக்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.. இவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. கதையின் நாயகனாக ஹரீஷ் கல்யாண் பொருத்தமான தேர்வு தான். ஆக்‌ஷன் களத்திற்கு புதியவர் என்றாலும், ஏற்றுக் கொ...
ஹவுஸ் ஓனர் என யதார்த்த கதையுடன் மீண்டும் களம் இறங்கிய லஷ்மி ராமகிருஷ்ணன்..!

ஹவுஸ் ஓனர் என யதார்த்த கதையுடன் மீண்டும் களம் இறங்கிய லஷ்மி ராமகிருஷ்ணன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ஜனரஞ்சகமான மசாலா சமாச்சாரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே  தடமில்லாமல் மறைந்து போவதை நாம் கண்டிருக்கிறோம். ஒரு சில இயக்குநர்களே தங்கள் திறமையை தடமாக பதிப்பதில் முனைப்போடு இருப்பார்கள்.  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. விரைவில் வெளிவர இருக்கும் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் ஜனரஞ்சகமும், சிந்தனையை தூண்டும் கருத்தும் ஒருங்கே கொண்ட படமாகும். “ஆரோகனம்” மற்றும் “அம்மினி” ஆகிய படங்களின் மூலம் எல்லாத்தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் “ஹவுஸ் ஒனர்” சமிபத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. “ வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது  மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்...
விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!

விஜய் ஆண்டனியின் தமிழரசன் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்த சங்கீதா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  "தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா,ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா,ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்...இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா  மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார். இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்... எனக்கேற்ற கதாபாத்திரம் சரி...
யோகிபாபு பேய் ஆக நடிக்கும் பட்டிப்புலம்!

யோகிபாபு பேய் ஆக நடிக்கும் பட்டிப்புலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு  "பட்டிபுலம்" என்று பெயரிட்டுள்ளனர்... இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்...இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்... மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி  ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ..ஆர்.கே.வர்மா இசை..வல்லவன் எடிட்டிங்...ஆர்.ஜி.ஆனந்த் கலை..வீரசமர்.. நடனம் ...விஜய் ரக்‌ஷித்  ஸ்டண்ட்.. மகேஷ் பாடல்கள்..மா.கா.பா.ஆனந்த்..வல்லவன் கானா ராஜேஷ் கானா வினோத் தயாரிப்பு மேற்பார்வை...அயன்புரம் ராஜு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ்...இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்... தயாரிப்பு ...திருமுருகன்...   படம் பற்றி இயக்குனர் சுரேஷிடம்...
நெடுநல்வாடை விமர்சனம்

நெடுநல்வாடை விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
சிங்கிலிபட்டி கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருபவர் செல்லையா (பூ ராம்). வீட்டை விட்டு ஓடிப் போன மகள் இரண்டு குழந்தைகளோடு மீண்டும் தனது அப்பாவை(பூ ராமை) நாடி வருகிறார். மகனின் எதிர்ப்பையும் மீறி தனது மகளையும் பேரப்பிள்ளைகள் இருவரையும் வீட்டிற்குள் தங்க வைக்கிறார் பூ ராம். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் தாய் மாமன் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று சொல்லி தனது பேரனை வளர்க்கிறார். படிப்பில், படு சுட்டியாக இருக்கும் நாயகன் இளங்கோவிற்கு நாயகி அஞ்சலி நாயர் மீது காதல். தாத்தா அறிவுரையின்படி தனது குடும்பத்திற்காக தனது காதலை தியாகம் செய்கிறார் இளங்கோ. ஒரு கட்டத்தில், காதலால் பல பிரச்சனைகள் ஏற்பட, இறுதியில் இளங்கோ வேலைக்காக வெளிநாடு சென்று விடுகிறார். பல வருடங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விடுகிறார். இளங்கோவின் காதல் ஜெயித்ததா..?? தனது இறுதி காலத்தில் பேரனை பூ ராம் கண்டாரா இல்...
300 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘ரெளடி பேபி பாடல்!

300 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘ரெளடி பேபி பாடல்!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூபில் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை. இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாரி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் "மாரி 2". இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தின் ரவுடிபேபி பாடல் இன்றும் இணையத்தில் டிரெண்டிங்கி வருகிறது. இந்த பாடலின் வீடியோ யூடியூப்பில் தற்போது வரை 300 மில்லியன் பார்வகைளை பெற்றுள்ளது மேலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப் பாடல் 71 நாட்களில் 300 மில்லியன் பார்வகைளை பெற்று சாதனையைப் படைத்திருக்கிறது. தென்னிந்திய சினிமா பாடல் ஒன்று 300 மில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை. &n...
கார்த்தி 19 பூஜையுடன் தொடங்கியது..!

கார்த்தி 19 பூஜையுடன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  கார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம். - "கார்த்தி 19" வித்தியாசமான கதை அம்சமான 'கைதி' என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'கார்த்தி 19' என்ற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. அதிகபொருள் செலவில் இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு...
“ஹீரோ” மூலம் இயக்குனராகும் “காக்கா முட்டை” வசனகர்த்தா..!

“ஹீரோ” மூலம் இயக்குனராகும் “காக்கா முட்டை” வசனகர்த்தா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள்
காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. 'குற்றம் தண்டனை' படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், மைத்திரி மூவி மேக்கர்ஸ்-ன் ஒன்பதாவது தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, 'ஹீரோ' என்ற படத்தை இயக்குகிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் 'ஹீரோ' அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும்.   'பாகுபலி', 'கே.ஜி.எஃப்' பாணியில்  விளையாட்டு த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் ஆரம்பமாகும்.    இப்படத்தின் கதாநாயகியாக 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். 'காலா', 'கபாலி' புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும்....