அடர்ந்த காட்டுப்பகுதியில் பழங்குடிகள் மத்தியில் நடைபெற்ற ‘ஜல்லிக்கட்டு’ தமிழ் திரைப்படம்..!
கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருகஅகும் காட்டுப்பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி மக்கள் வாழும் மசாய் மாரா கிராமத்தில் நடைபெற்ற முதல் தென்னிந்திய தமிழ் திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’.
கென்யாவின் மாசாய் மாரா கிராம பழங்குடிகள் எந்த தகவல் தொடர்பும் இல்லாமல் மிக பழமையான கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை இன்றும் பாதுகாத்து வாழ்ந்து வருகிறார்கள். கால்நடைகளோடு தமிழர்களுக்கு எப்படி ஒரு நெருக்கமான உறவு இருக்கிறதோ அதேபோன்று அந்த பழங்குடி மக்களுக்கும் கால்நடைகளோடு நல்ல உறவோடு இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் கால்நடைகளின் பங்கு மிக அதிகம் காணப்படுகிறது.
தமிழகத்தில் மெரீனாவில் இளைஞர்களால் நடைபெற்ற அறப்போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் தமிழர்களின் அடையாளமான காளைகளைப்போல மசாய் பழங்குடிகள் வைத்திருக்கிற காளைகளுக்கும் ஒரு தனித்துவமான...









