HOME SLIDER
கபாலி செல்வா ஆன நடிகர் செல்வா..!
நடிகர் செல்வா தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடைய தீவிர ரசிகர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப் படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதா நாயகனாக நடித்து உள்ள இவர் கோல்மால் என்கிற வெற்றி படத்தை இயக்கியும் உள்ளார்.
நீண்ட இடை வெளிக்கு பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம், " 12 .12. 1950". சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்த நாளை குறிப்பிடும் இந்த தலைப்பு ஒரு தீவிர ரஜினி ரசிகனை பற்றிய கதை என்கிறார் செல்வா. நேற்று நடிகர் சிவகார்திகேயனால் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த படத்தின் motion போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் பெரிய வரவேற்ப்பு பெற்றது.
"இந்த படத்தின் தலைப்பு அவருடைய சாதனையை மட்டுமின்றி, அவரது பிறந்த நாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும் ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை.
. அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களு...
சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்: கஜோல்
தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் அறிமுக விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் கலந்துகொள்ள சென்னை வந்த நடிகை கஜோல், நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழில் நான் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். இந்த படம் 1997-ம் ஆண்டு வெளியானது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தில் நடித்துள்ளேன்.
தமிழ் மொழியில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழி தான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர். நான் தயங்கிய நேரத...
நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும் என்பதை பதிவு செய்யும் ரூபாய்..!
காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “
சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர்கள். மற்றும் கிஷோர்ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.அன்பழகன்.
பணம் எல்லோருக்கும் அவசியம் தான்..அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம்.. நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்.. இதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக...
கட்டணங்களை குறைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் – விஷால்
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன் “
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் “ வேலையிலல்லா விவசாயி படத்தின் துவக்க விழாவும் இன்று மாலை நடைபெற்றது.
விழாவில் ஆற்காடு வீராசாமி , கருணாஸ் எம்.எல்.எ, தயாரிப்பாளர் சங்க தலைவவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பண்ணீர் செல்வம், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இயக்குனர்கள் மனோஜ்குமார், ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, பிரவீன்காந்த், சரவணன், சாய்ரமணி. நடிகர்கள் மன்சூர்அலிகான், ரமணா, உதயா, சௌந்தர்ராஜன், தயாரிப்பாளர்கள் ஜி.கே....
பயிர் வளர்க்கும் விவசாயிகள் உயிர் வலியை அரசுக்கு அழுத்தமாக சொல்லும் “கொலை விளையும் நிலம்” ஆவண படம்..!
பயிர் வளர்க்கும் விவசாயிகள் உயிர் வலியை அரசுக்கு அழுத்தமாக சொல்லும் "கொலை விளையும் நிலம்" ஆவண படம்..!
தமிழகத்தில் விவசாயத்தை முற்றிலும் அழித்து அண்டை மாநில அரசுகளிடம் கையேந்த சதி நடக்கிறது என்ற அதிர்ச்சி உண்மையை தனது கொலை விளையும் நிலம் ஆவண படம் மூலமாக ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் பத்திரிக்கையாளர் ராஜீவ்காந்தி.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாத அரசுகள் என சாடுவதோடு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களில் இன்றை சூழலையும் பதிவு செய்திருக்கிறார்.
சுமார் 50 நிமடம் ஓடும் இந்த ஆவண படத்தை சக பத்திரிகையாளர் கவிதாவும் , கத்தாரில் உள்ள சதகதுல்லாவும் தயாரித்திருக்கிறார்கள்.
ராஜூ முருகன் பாடல் வரிகளுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். ஜோகன் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
இதன் திரையிடல் நிகழ்ச்சியில் இயக்குனர்கள் லிங்குசாமி, எழில், சீனு ராமசாமி, பாலாஜி சக்திவேல...
இன்றைய அவலத்தையும் நாளைய பிரச்சனையயும் சொல்லப் போகும் ” வேலை இல்லா விவசாயி “
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ வேலையில்லா விவசாயி “
கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் - P.V.பிரசாத்.
இவர் மாபெரும் வெற்றி காதலில் விழுந்தேன் படத்தை இயக்கியவர்.
வேலை இல்லா விவசாயி என்கிற இந்த கதைக் கருவை எடுக்க காரணம் என்ன என்று பி.வி பிரசாத் கூறும் போது...
எங்கள் குடும்பம் விவசாய குடும்பம்..செய்யாரை சுற்றி நிறைய நிலம் எங்களுக்கு இருந்தது.
இருந்தது என்று தான் சொல்ல முடியுமே தவிர இருக்கிறது என்று சொல்ல முடியாது.
கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் பசுமையாக காட்சி தந்த அந்த விவசாய நிலங்கள் எல்லாம் பங...
தயாரிப்பாளர் ஆன நான் கடவுள் ராஜேந்திரன் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா
TN 75 KK.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா “
கதாநாயகனாக அகில் நடிக்கிறார். சதுரங்கவேட்டை இஷாரா நாயர், கமர்கட்டு படத்தில் நடித்த ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கெவின்
தயாரிப்பு - திருமுருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நண்பர்கள்.
படம் பற்றி இயக்குனர்.. கெவின் கூறியதாவது...
தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள் அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள் அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ...
பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன் “
பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன் “
நாயகியாக பானு நடிக்கிறார். மற்றும் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு, ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் - P.V.பிரசாத்
இவர் மாபெரும் வெற்றி காதலில் விழுந்தேன் படத்தை இயக்கியவர்.
சகுந்தலாவின் காதலன் படத்தின் இயக்குனரும் நடிகருமான p.v .பிரசாத் கூறியதாவது...காதலில் விழுந்தேன் எப்படி ஜனரஞ்சகமான படமாக வெற்றி பெற்றதோ அது மாதிரி சகுந்தலாவின் காதலனும் வெற்றி பெறும்.. இதில் அத்தனையும...


