வியாழக்கிழமை, ஆகஸ்ட் 20
Shadow

டிரம்ப் மகளுக்கு சமந்தா ஸ்பெஷல் பரிசு

 

சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேரில் வந்திருந்தார். அவருக்கு சமந்தா சேலை பரிசளித்தார். தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக இருக்கிறார் சமந்தா. தனது மாநிலத்துக்கு வரும் டிரம்ப் மகளுக்கு பரிசளிக்க எண்ணினார்.

அதற்கு பொருத்தமான பரிசு பற்றி ஆலோசித்தவர் இறுதியாக கோல்லம்பமா சேலைகளை வழங்க முடிவு செய்தார். கைத்தறியில் இது நெய்யப்படுகிறது. அவரது தேர்வை அரசு அங்கீகரித்ததுடன் தனது பங்காகவும் அதே வகையில் உருவாக்கப்பட்ட பல்வேறு டிசைன் சேலைகளையும் இவாங்காவுக்கு வழங்கியது.

இதையடுத்து இவாங்காவுடன் பாரம்பரியமான கோல்லம்பமா சேலைகளும் வெள்ளை மாளிகைக்கு செல்கிறது. நடிப்பு, இல்லற வாழ்க்கையில் சமந்தா கவனம் செலுத்தி வந்தபோதும் கைத்தறி ஆடைகளை விளம்பரப்படுத்தும் தூதராகவும் தனது பங்களிப்பை செய்துவருகிறார்

354 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன