சசிகுமார் – ராஜு முருகன் இணையும் ‘ மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
*சசிகுமார் - ராஜு முருகன் இணையும் ' மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*
*ஆர்யா - அனுராக் காஷ்யப் - கிரீஷ் ஜகர்லமுடி - ராஜ் பி. ஷெட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- இணைந்து வெளியிட்ட சசிகுமாரின் 'மை லார்ட் ' பட ஃபர்ஸ்ட் லுக்*
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர்யா - பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் - கன்னட திரைப்பட இயக்குநர் ராஜ் பி. ஷெட்டி - தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிரீஷ் ஜகர்லமுடி - மலையாள திரைப்பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி- ஆகிய ஐந்து மொழி திரை ஆளுமைகள் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்...









