வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

HOME SLIDER

வீடு தேடி சென்று இயக்குனரை பாராட்டிய விக்ரம்!

வீடு தேடி சென்று இயக்குனரை பாராட்டிய விக்ரம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
வீடு தேடி சென்று இயக்குனரை பாராட்டிய விக்ரம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி இருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜ், கர்ணன் படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் தயாரிக்கிறார்....
பகத் பாசில் படங்களுக்கு தடை!

பகத் பாசில் படங்களுக்கு தடை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பகத் பாசில் படங்களுக்கு தடை! கொரோனா பரவல் திரையுலகில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கில் பல மாதங்கள் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அறிவித்து உள்ளன. இதனால் திரையரங்குகளில் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வந்துள்ளன. மலையாளத்தில் பகத் பாசில் நடித்துள்ள சி யூ சூன், இருள், ஜோஜி ஆகிய படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளன. தியேட்டர்களை திறந்த பிறகும் பகத் பாசில் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அவரது படங்களை இனிமேல் திரையரங...
பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் சங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் சங்கர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ படத்தின் தழுவலாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு 2022 ஆண்டு தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது....
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கோவை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம்! கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது, இரவு 11 மணியை தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் 10.30 மணிக்கு முன்னதாகவே போலீசார் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரை தாக்கியது சாத்தான்குளம் படுகொலைகளை நினைவு படுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது, அரசு நிர்வாகத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார். இதேபோல கோவை எம்.பி. நடராஜன் உள்ளிட்டோரும் சப்-இன்ஸ்பெக்டருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில் பெண்கள், குழந்தைகள் மேல் நடத்தப்பட்ட தடியடி கண்டிக்க கூடியது. தற்போது சப்-இன்ஸ்பெக்டர் வேறுதுறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு போல் உள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய போலீஸ் க...
ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8ல் உண்ணாவிரதம்!

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8ல் உண்ணாவிரதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம்!   தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! "ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவித்துள்ளது. தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று (13.04.2021) காலை சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அதன்பின் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது. தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா *பெ. மணியரசன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம...
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்!

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாற்றம்! தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இதுவரை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 8 லட்சத்து 80 ஆயிரத்து 910 பேர் குணமடைந்து உள்ளனர். 46 ஆயிரத்து 308 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் கொரோனா தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி விடாதது போன்ற காரணங்களால் சென்னையில் கொரோனா தாக்கம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். மற்றவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனை...
புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..!

புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..!

HOME SLIDER, NEWS, politics
    புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா பொறுப்பேற்றார்..! இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுனில் அரோரா இருந்து வருகிறார். அவருடைய பதவி காலம் நாளை முடிவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சுஷில் சந்திரா தற்போது தேர்தல் கமி‌ஷனர் பதவியில் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தேர்தல் கமி‌ஷனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த பணியில் இருந்து வந்த நிலையில் இப்போது தலைமை தேர்தல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய தலைமை தேர்தல் கமி‌ஷனராக சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவிக்காலம் 2022 மே 14-ந் தேதிவரை உள்ளது. அதுவரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். இந்த காலகட்டத்த...
தனி ஆளாக தர்ணா போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக!

தனி ஆளாக தர்ணா போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தனி ஆளாக உண்ணாவிரத போராட்டம் மம்தாவின் அதிரடியால் ஆடிப்போன பாஜக! மேற்கு வங்காள மாநில தேர்தலில் பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. கூச்பெகார் பகுதியில் நடந்த மோதலில் மத்தியபடை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது அந்த மாநிலத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள முதல்-மந்தரி மம்தா பானர்ஜி மத்திய படைகள் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். மத்திய படையினர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறு யாராவது நடந்தால் அவர்களை முற்றுகையிடுங்கள் என்றும் கூறியிருந்தார். இதனால்தான் மத்திய படையினரை திரிணாமுல் காங்கிரசார் முற்றுகையிட்டதாகவும், அது மோதலாக மாறி துப்பாக்கி சூட்டில் முடிந்ததாகவும் பாரதிய ஜனதாவினர் குற்றம் சாட்டினர். மேலும் ஒரு கூட்டத்தில் பேசும்போது மம்தா பானர்ஜி மத ரீதியாக கருத்துக்களை தெரிவித...
திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருச்செந்தூர் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள் அமல் : முதியவர்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது கரோனா பரவலையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணியளவில் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படுகிறது. இதற்கிடையே கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ...
ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்த இளையராஜா! இசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது புது ஸ்டூடியோவான இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வெளியிட்டார். காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ளார். தூத்துக்குடி, மதுர சம்பவம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். மனசில பெரியவன் தான் மதுரக்காரன்... என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் ஒரே நாளில் இசைக்கோர்ப்பை முடித்துள்ளார். மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. மதுரையில் நடந்த உண்மை சம்பவமும் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்ட கதை...