HOME SLIDER
விவசாய சங்கத்தின் பாராட்டைப் பெற்ற ‘பப்ளிக் ஸ்டார்’
‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படக்குழுவினர், விவசாயத்தைக் காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருந்தனர். இதை மக்கள் பலரும் வரவேற்றனர்.
இது குறித்த செய்திகளை பத்திரிக்கைகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு ‘தப்பாட்டம்’ படக்குழுவினரைப் பாராட்டி, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் ரயில் நிலையத்தில் பல்வேறு விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயக் குடும்பத்தினர் 4 பேருக்கு தலா 25000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பணத்தை தேச...
30 விதமான லொக்கேசன்களில் விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ’ 96
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால்
இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96 என்ற படத்தை தயாரிக்கிறார்.
கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய்சேதுபதி சம்மந்தப்பட்ட பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் விரைவில் துவங்க உள்ளது. அதில் விஜய்சேதுபதி, திரிஷா, ஜனகராஜ் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப் பட உள்ளது.
இதுவரை விஜய்சே...
செல்போன் சங்கடத்தை சொல்லும் ‘88’
A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "88" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தில் மதன் கதானாயகனாக நடிக்கிறார். கதானாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார்
பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா ,கடம் கிஷன்,மீராகிருஷ்ணன் இவர்களுடன் ஜான் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் எம்.மதன்.
இன்று விஞ்ஞானம் றெக்க கட்டிப் பறக்கிறது.
பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப் பட்ட செல்போன்களின் பயன்பாடு இன்று எல்லை கடந்து விட்டது. கைக்குள்ளேயே ஒரு உலகத்தை கொண்டு வந்த நவீனம் தான் செல்போன். எதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாதோ அதையெல்லாம் வெளிப்படையாக தெரிவிப்பதால் என்ன மாதிரியான சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதைத் தான் இதில் அலசி இருக்கிறோம்..
ஜுலை மாதம...
காட்டை மையப் படுத்தி உருவாக்கப்பட்டுள்ள “சவரிக்காடு ”
ஆன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம் "சவரிக்காடு "
இந்த படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி,கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள்.
மற்றும் சூரி, ரோபோ சங்கர், சுவாதி, சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்M.N.கிருஷ்ணகுமார்.
இது புது மாதிரியான திரைக்கதையம் கொண்ட படம் .முழுக்க முழுக்க காட்டை மையப் படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் இது..நண்பர்களைப் பற்றியும் நட்பைப் பற்றியும் உயர்வான மதிப்பை ஏற்படுத்தும் படமாக சவரிக்காடு உருவாகி உள்ளது.
படம் இமாதம் 21 ம் தேதி உலக முழுவதும் வெளியாகிறது....
100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய மற்றும் இந்திய சாதனை புரிந்த 68 வயது “ஜகத் தர்கஸ்”
ஜகத் தர்கஸ் 68 வயது நிரம்பிய இவர் சிறு வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொழுதுபோக்கை துறந்தார்.
இவர் முகமது . ரஃபி சாப் பாடல்களை அதிகமாக விரும்பியவர். பாடல்களை பாடுவதை விட அதனை விசில் மூலம் அதனை வெளிப்படுத்த ஆரம்பித்தார். விசில் அடிப்பதில் தன்னை மிகவும் வலிமை படுத்திக்கொண்டார் . "WIND MAGIC"- அதாவது காற்று மந்திரம் புரிவதில் இவர் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
மேலும் இவர் சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த " WIND MAGIC " மூலம் பல விருதுகளை பெற்றுள்ளார்.
9.7.2017 அன்று இவர் 120 முகமது .ரஃபி சாப் படலாகளுக்கு விசில் மூலம் இசை எழுப்பி ஆசிய மற்றும் இந்திய சாதனையை நிகழ்த்தினார். இந்த விழா அரும்பாக்கத்தில் உள்ள" டாக்டர். ஜி.வைஷ்ணவ கல்லூரி" அரங்கதில் நடைபெற்றது. இவர் 120 பாடல்களுக்கு 10 மணி நேரத்தில் விசில் மூலம் இசை எழுப்பி "திரும...
ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா… அல்லது தயாரிப்பாளருக்கு ‘ஷாக்’ கொடுக்குமா..?!
ரசிகர்களுக்கு பண்டிகை ‘டிரீட்’ கொடுக்குமா... அல்லது தயாரிப்பாளருக்கு ‘ஷாக்’ கொடுக்குமா..?!
தமிழில் நெம்பர் ஒன் நடிகையிடத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு சமீபத்திய சறுக்கல் ‘டோரா’ மிக பிரம £ண்டமாக விளம்பரப்படுத்தியும் வெளியான இடங்களில் வசூலிலும் சறுக்கல் ரசிகர்கள் மத்தியிலும் சறுக்கல் ஏற்ப டுத்திய படம். இந்த படத்தை வெளியிட்ட அதே நிறுவனம் தான் இப்போது ‘பண்டிகை’ என்ற படத்தை வெளியி டுகிறார்கள்.
சமீபத்திய தமிழ்சினிமா பரபரப்புகள், பஞ்சாயத்துக்கள், ஜிஎஸ்டி விவகாரங்கள், கேளிக்கை வரி வில்லங்கங்கள் வேலை நிறுத்தப்போராட்டங்கள் திடீர் வாபஸ் அறிவிப்புகளுக்கு பிறகு தியேட்டர் பக்கம் மக்கள் கூட்டம் வெகுவ £கவேவே குறைந்துள்ளது. இந்த நிலையில், வரும் வெள்ளியன்று ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், திரி, ரூபாய், பண்டிகை என பல படங்கள் ரிலீசுக்கு தயார் ஆகியிருக்கிறார்கள். ஏற்கனவே ரிலீஸ் ஆகி ஓரளவுக்க...
நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் – கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!
நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் - கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!
சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபகரணங்களை வழங்கினார்கள்.
சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரத்தில் சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனத்தலைவர் லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழா சாய்ராம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து, இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலை...
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ஆலுவா சிறையில் அடைப்பு
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் நடிகர் ஒருவருக்கு இந்த கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. விசாரணையின் அடிப்படையில் நடிகர் திலீப்பிடம் நேற்று காலை முதல் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் நடிகர் திலீப் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். அவர் மீது கடத்தல் சதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அங்கமாலி நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் நடிகர் திலீப் உடனடியாக ஆஜர்படுத்தப்பட்டார். தீலீப்பு எதிராக 19 ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். மேலும், கடத்தல் மற்றும் தாக்குதலுக்கு சுமார் ரூ.1.5 கோடி கொடுத்ததாக போலீசார் த...
`பாகுபலி’ நடிகர் பிரபாஸ் உருக்கமான கடிதம்
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி' என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் பெயர் சொல்லும் படமாக `பாகுபலி' உருவெடுத்துள்ளது. `பாகுபலி' படத்தின் இரண்டாவது பாகம் உலகளவில் ரூ.1700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது.
இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுலை 10-ஆம் தேதி வெளியானது. நேற்றோடு `பாகுபலி' முதல் பாகம் திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. `பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். `பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் இவர்கள் பிரபலமாகிவிட்டனர் என்று கூறினால் அது மிகையாகாது. அதிலும் பிரபாஸ், இந்திய ப...

