சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்!

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்! ‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். அரசியல் திகில் படமாக உருவாகி வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்....
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!

ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்! தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம் உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்...
சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்!

சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்! ஆஸ்திரேலியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,465,811 உயர்ந்துள்ளது. கொரோனா தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் மொத்தம் 3,465 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பல நாடுகளில் காணப்படும் இறப்பு விகிதத்தை விட மிகக் குறைவு.  இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறார்களுக்க பூஸ்டராகப் பயன்படுத்தப்படும்  ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ...
உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறு...
காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்!

காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்! நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினிக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. பாலிவுட் நடிகை மெளனி ராய் தனது திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்து வந்தார். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்புமின்றி இவர்களது திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மணமேடையில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
சிம்பு படத்தின் புதிய அப்டேட் – ஸ்டுடியோ கிரீன் அறிவிப்பு!

சிம்பு படத்தின் புதிய அப்டேட் – ஸ்டுடியோ கிரீன் அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்பு படத்தின் புதிய அப்டேட் - ஸ்டுடியோ கிரீன் அறிவிப்பு! வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். முன்பு சிம்பு மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி தற்போது அவர் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்...
அருள் நிதியின் தேஜாவு டீசர்!

அருள் நிதியின் தேஜாவு டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள் நிதியின் தேஜாவு டீசர்! தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்றவர் நடிகர் அருள்நிதி. இவர் தற்போது 'தேஜாவு' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி திரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ‘தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/nKN0VkzoPlU...
தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரபலம் – அதிர்ச்சியில் படக்குழு!

தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரபலம் – அதிர்ச்சியில் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரபலம் - அதிர்ச்சியில் படக்குழு! நடிகர் தனுஷ் வரிசையாக அவர் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அதன் பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடங்கிய ’வாத்தி’ படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் க...
கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி!

கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி! கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த கட்டிடம் இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பாகும். யாரும் வசிக்காத நிலையில் கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது....