புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்?

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்? கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே குட்லக் சகி திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்ப...
பாபநாசம் 2-ம் பாகம்… ஒரே மாதத்தில் நடித்து முடிக்க கமல் திட்டம்!

பாபநாசம் 2-ம் பாகம்… ஒரே மாதத்தில் நடித்து முடிக்க கமல் திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாபநாசம் 2-ம் பாகம்... ஒரே மாதத்தில் நடித்து முடிக்க கமல் திட்டம்! மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர். தமிழிலும் திரிஷ்யம் 2 படம் பாபநாசம் 2-ம் பாகமாக ரீமேக் செய்யப்படுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல்ஹாசனுடன் இதுகுறித்து பேச திரிஷ்யம் 2 படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் சம்மதித்தால் திரி...
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், நடிகைகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்! நடிகை சாந்தினி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து முன் ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகண்டனை வருகிற 9-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்  மீதான வழக்கில் அவரது உதவியாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை ஐகோர்ட்டு சம்மன் அனுப்ப...
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்! தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருப்பதால் இந்த மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாவட்ட...
நடிகை அஞ்சலிக்கு திருமணமா?

நடிகை அஞ்சலிக்கு திருமணமா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை அஞ்சலிக்கு திருமணமா? தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் படம் வந்தது. தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். அஞ்சலிக்கு 34 வயது ஆகிறது. ஏற்கனவே நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் பேசினர். அஞ்சலி அளித்த பேட்டியொன்றில் நான் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் நிறைவேறவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது என்றார். காதலித்தவர் பெயரை வெளிப்படுத்தவில்லை. இந...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்! இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை அடுத்து தனது மகனுடன் செல்பி எடுத்து, அந்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தாங்கள் இருவரும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட...
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது! தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள தளர்...
சீன மொழியில் ரீமேக் ஆகும் ‛திரிஷ்யம் 2’!

சீன மொழியில் ரீமேக் ஆகும் ‛திரிஷ்யம் 2’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சீன மொழியில் ரீமேக் ஆகும் ‛திரிஷ்யம் 2’! மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த இந்தப் படத்தை இந்திய திரையுலகே வியந்து பாராட்டியது. மலையாளத்தில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த திரிஷ்யம் படம், தமிழிலும் கமல்ஹாசன், நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது. பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகளிலும், கடந்த 2019ம் ஆண்டு சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட போது, சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப கிளைமாக்ஸ் காட்சியை நாயகன் போலீசில் சரணடைவது போல் மாற்றி இருந்தனர். இதற்கும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த படத்தையும் சீன மொழியில் ரீமேக் செய்ய உள்ளனர். த...
3வது படம் இயக்க தயாரான கிருத்திகா உதயநிதி!

3வது படம் இயக்க தயாரான கிருத்திகா உதயநிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
3வது படம் இயக்க தயாரான கிருத்திகா உதயநிதி! உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‛வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா நடிக்க உள்ளார். இவர் விஜய்சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமானவர். இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேசன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை – மவுனம் கலைத்த சமந்தா!

‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை – மவுனம் கலைத்த சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‛தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் சர்ச்சை - மவுனம் கலைத்த சமந்தா! நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன்-2’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் இவர் தமிழ் ஈழ பயங்கரவாதியாக நடித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சர்ச்சைக்குரிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிப்பதற்காக என்னிடம் இயக்குனர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை திரையிட்டு காண்பித்தனர். அதை பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்தேன். அதில் எனக்கு ராஜி என்ற பயங்கரவாதி பெண் வேடம். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் ...