ஜெ.,அக்டோபர் மாதமே மரணம்: திமுகவைச் சார்ந்த டாக்டர் சரவணன் நீதிபதியிடம் புகார்
ஜெயலலிதா டிச.5-க்கு முன்பே அக்டோபர் மாதமே மரணமடைந்துவிட்டார், அவரது கைரேகை அவர் மரணமடைந்த பின்னரே எடுக்கப்பட்டது. ஆகவே அதில் நீரோட்டம் இல்லை என திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமியிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச.5 அன்று மரணம்டைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெ.தீபா, ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
அவர் விசாரணையை தொடங்கி உள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த ஆவணங்களை நேரிலோ, பதிவு தபாலிலோ தன்னிடம் அளிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று ஜெ.தீபாவின் கணவர் மாதவன் சில ஆவணங்...









