செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு! ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்களாம். தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்பதால் இவ்வாறு செய்கிறார்களாம். மேலும், இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தினால் தான் உரிய நேரத்தில் படத்தை முடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளதாம். அதனால் தற்போது தெலங்கானாவில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், அம்மாநில அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாக...
ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்!

ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்! தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா அடுத்ததாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ‘105 மினிட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு, ஒரே ஷாட்டில் படமாக்கபட உள்ளதாம். திரில்லர் படமாக உருவாகும் இதை ராஜா துஷ்ஷா இயக்குகிறார். ஒரே ஷாட்டில் எடுக்கப்படும், ஒரு கதாப்பாத்திரம் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்கிற சாதனையை இந்தப் படம் படைக்கவுள்ளது. இதேபோல் தமிழில்...
மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் அப்டேட்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இந்நிலையில், மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல்...
மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த தனுஷ்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் உட்பட படக்குழுவினரை பாராட்டினர். வசூல் ரீதியாகவும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. நடிகர் தனுஷ் நடித்த படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக கர்ணன் அமைந்தது. இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்தாண்டு படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தனுஷ் தெ...
லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாபம் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவக...
3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் – ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்!

3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் – ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
3 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் - ரைசாவுக்கு மருத்துவர் நோட்டீஸ்! அழகியல் மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும், இதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா, அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் தற்போது ரைசா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், “எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார். அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.” என தெரிவித்துள்ளார். மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டி உள்ளார். இதையடுத்து நடிகை ரைசா அவரிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது மான நஷ்ட வழ...
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் திரிஷாவின் மற்றொரு படம்! எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் சரவணன், அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘ராங்கி’. இப்படத்திற்கான கதை மற்றும் வசனத்தை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியிருக்கிறார். ‘ராங்கி’ என்றால் அடங்காத, துணிச்சல் மிகுந்த பெண் என்று பொருள். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ராங்கி படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது....
கொரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்!

கொரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா பாதிப்பால் பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்! இந்தி திரையுலகில் கடந்த 1990-ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990-ம் ஆண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து இசையமைத்த பல படங்கள் வெற்றி பெற்றன. சாஜன் (1991), ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே (1993), பர்தேஸ் (1997) உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர்கள் ஒன்றாக பணியாற்றினார்கள்.  இதன்பின்னர் அவர்கள் கடைசியாக, தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் என்ற படத்தில் ஒன்றாக பணியாற்றினர்.  கடந்த 2005-ம் ஆண்டுக்கு பின்னர் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக மும்பையில் உள்ள ரகேஜா மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன் சேர்க்கப்பட்டார். 66 வயதுடைய ஷ்ரவன் நேற்றிரவு 9.30 மணியளவில் சிகிச்சை பலன...
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா - பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்! மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார். சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் ச...
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் –  அரவிந்த் கெஜ்ரிவால்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் –  அரவிந்த் கெஜ்ரிவால்

HOME SLIDER, NEWS, politics
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் -  அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி,  ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார் நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 82 சதவிகித தொற்று பாதிப்பு டெல்லி, தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது. தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, நோயாளிகளுக...