உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்- ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இடைநிலை ஆசிரியர்களுக்கு (சாதாரண நிலை) 6-வது ஊதியக் குழுவிற்கு முன்னர் 31.12.2005 வரை ரூ.4500 125 7000 என்ற ஊதிய விகிதம் நடைமுறையில் இருந்து வந்தது. ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசாணை எண்.234 நிதித் துறை, நாள் 1.6.2009ன்படி இடைநிலை ஆசிரியர்கள் (சாதாரண நிலை) ஊதிய விகிதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் 2800 என திருத்திய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டு, 1.1.2006 முதல் கருத்தியலாகவும் 1.1.2007 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் ஆணைகள் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு...









