கட்டம் படம் ஒரு ‘கர்மிக் திரில்லர்’
நெடுஞ்சாலை' , ' 'அதே கண்கள் ' போன்ற படங்களில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்த ஜொலித்த நாயகி ஷிவதா நாயர். அருமையான, வித்யாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நுணுக்கத்தை நன்கு அறிந்திருக்கும் இவரது அடுத்த படம் ''கட்டம்''. முரண் படத்தை இயக்கிய ராஜன் மாதவ் இயக்கியுள்ள படம் 'கட்டம்'. இப்படத்தை 'icreatewonderfilms' சார்பில் சந்தியா ஜனா தயாரித்துள்ளார். புதுமுகம் நந்தன் மற்றும் நிவாஸ் , ஷிவதாவோடு சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து ஷிவதா பேசுகையில்,'' கட்டம் ஒரு 'கர்மிக் திரில்லர்'.இது ரசிகர்களுக்கு முற்றிலும் புது வகையான சினிமா.சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, எதிர்பாராத நேரத்தில், முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் விதியெனும் 'கர்மா' வால் பழிவாங்கப்படுவதே 'கர்மிக் திரில்லர்'. இதுவே 'கட்டம்' படத்தின் சாராம...









