செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

மடோனா செபாஸ்டியன் காதலர்!

மடோனா செபாஸ்டியன் காதலர்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
மடோனா செபாஸ்டியன் காதலர்! நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரேமம்'. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ராபி ஆபிரகாம். இவர் 'நேரம்', 'ஓம் ஷாந்தி ஓஷானா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மடோனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் "உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிவதிப்பார்" என்று பதிவு செய்திருக்கிறார் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்துடன் இந்த பதிவை செய்திருக்கிறார் மடோனா....
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீரெட்டி

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீரெட்டி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்றும், பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. மேலும் இதற்காக அவர் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார். தெலுங்கு சினிமா தவிர தமிழ் சினிமாவிலும் அத்தகைய போக்கு இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பிய அவர், பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பரபரப்பு புகார் கூறினார். தற்பொழுது நடிகை ஸ்ரீரெட்டி மறைந்த பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக்கப்படுகிறது...
‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீஸ்!

‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
‘எமதர்மன்’ வேடமணிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீஸ்! கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் 16-ந் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் எமதர்மராஜா வேடமணிந்து மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் நான் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வந்து உள்ளேன் என்று கூறி தடுப்பூசி செலுத்தி கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும். மக்களிடையே ஒரு விழிப்புணர்வை...
தொடங்கியது சிவகார்த்திகேயனின் “டான்”

தொடங்கியது சிவகார்த்திகேயனின் “டான்”

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரபல நட்சத்திர பட்டாளங்களுடன் தொடங்கியது "டான்" திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு. பிரம்மாண்ட திரைபடங்களை தயாரிக்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் அவர்களின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் "டான்" . அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இத்திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் பிரபல காமெடி நடிகர்கள் சூரி, முனிஷ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், RJ விஜய், சிவாங்கி மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் படபிடிப்பு இன்று காலை கோவையில் உள்ள KPR கல்லூரியில் நடைப்பெற்றது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனின் SK PRODUCTIONS இத்திரைப்படத்தை தயாரித்து வழங்குகிறது...
கிருபானந்த வாரியார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர்

கிருபானந்த வாரியார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர்

HOME SLIDER, NEWS, politics
கிருபானந்த வாரியார் பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில் இன்று அவர் வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல், என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார்....
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயண திட்டம்!

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயண திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயண திட்டம்! டெல்லியில் மாநில கட்சிகள் அலுவலகம் அமைத்துக்கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன அ.தி.மு.க.வுக்கும் இவ்வாறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது. 3 மாடிகளுடன் பிரமாண்டமான முறையில் கட்டிடம் கட்டப்பட்டது. அதில் ஒரு மாடியில் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியும், மற்றொரு மாடியில் ஜெயலலிதா புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்படுகிறது. இத்துடன் கூட்ட அரங்கம், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கும் அறைகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. இதன் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் இருந்தது. கடந்த 21-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர...
“கமலி” ஆனந்தி எனக்கு பிடித்த கதாபாத்திரம்- கயல் ஆனந்தி பெருமிதம்!

“கமலி” ஆனந்தி எனக்கு பிடித்த கதாபாத்திரம்- கயல் ஆனந்தி பெருமிதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் - 'கயல்' ஆனந்தி பெருமிதம். ‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது, ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார். குமணன் பேசும்போது, இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன். பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசுவ...
சந்தானத்தின் ராஜ்யசபா எம்.பி. ஆசை!

சந்தானத்தின் ராஜ்யசபா எம்.பி. ஆசை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன்: சந்தானம் பேச்சு 'ஏ 1' படத்தின் மூலம் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள 'பாரிஸ் ஜெயராஜ்' திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, "தயாரிப்பாளர் குமாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து...
சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் – மு.க.ஸ்டாலின் பேச்சு

சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் – மு.க.ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா வந்தவுடன் நடக்க வேண்டியது நடக்கும் - மு.க.ஸ்டாலின் பேச்சு தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் மகள் சங்கத்தமிழ் மற்றும் பரத் முத்துதங்கம் ஆகியோரின் திருமணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த பின் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுக்கோட்டை சந்திரசேகரன் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து தி.மு.க.விற்காக உழைத்தார். சுயமரியாதை திருமணத்தை அண்ணா சட்டமாக்கினார். அதன்பிறகு தமிழகத்தில் பரவலாக சுயமரியாதை திருமணங்கள் நடக்க தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் கடந்த சில மாதங்களாக காணொலிக்காட்சி மூலம் சுமார் 150 சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தேன் இன்னும் 3 மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் என்ன முடிவு வரும் என்று அனைவரும் அறிந்...
சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்

சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்

HOME SLIDER, NEWS, politics
சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா நேற்று காலை கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். சிறையில் இருந்து விடுதலையான பின், முதன்முறையாக மவுனம் கலைத்து நேற்று பேட்டிளியத்தார். அப்போது அவர் கூறுகையில், தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். அதிமுக பொது எதிரி ஆட்சிக் கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் என தெரிவித்தார். இந்நிலையில், பெங்களூருசிறையில் இருந்து விடுதலையான பின்னர் சசிகலா இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் ம...