சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை – விக்டோரியா மருத்துவமனை
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை
சசிகலாவுக்கு தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
சசிகலாவுக்கு திடீரென கடந்த 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்ட அவர்,
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு மறுநாள் அவர் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்
அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவரது நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) அனு...







