கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது -அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
பிறகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூ...









