தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்
அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாக
அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறு...
காதலரை மணந்தார் நாகினி சீரியல் நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்!
நாகினி சீரியல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். நாகினிக்கும் அவரது காதலர் சுராஜ் நம்பியாருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.
பாலிவுட் நடிகை மெளனி ராய் தனது திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்து வந்தார்.
இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்புமின்றி இவர்களது திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது. கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் மணமேடையில் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் புதுமண தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்....
சிம்பு படத்தின் புதிய அப்டேட் - ஸ்டுடியோ கிரீன் அறிவிப்பு!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். முன்பு சிம்பு மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தாண்டி தற்போது அவர் படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்...
அருள் நிதியின் தேஜாவு டீசர்!
தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்றவர் நடிகர் அருள்நிதி. இவர் தற்போது 'தேஜாவு' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி திரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
‘தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/nKN0VkzoPlU...
தனுஷ் படத்தில் இருந்து விலகிய பிரபலம் - அதிர்ச்சியில் படக்குழு!
நடிகர் தனுஷ் வரிசையாக அவர் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
அதன் பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தொடங்கிய ’வாத்தி’ படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் தினேஷ் க...
கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி!
கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த கட்டிடம் இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பாகும். யாரும் வசிக்காத நிலையில் கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது....
மகான் படத்தில் சத்தியவானாக பாபி சிம்ஹா - வெளியான புகைப்படம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்து சமீபத்தில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி, அந்த படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமூக வலைத்தளத்த...
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் நிலையை பொறுத்து தளர்வுகளை அனுமதிக்கலாமா என சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதில் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இந்த கூட்...
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5% இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆன்லைன் கலந்தாய்வுக்காக www.tnhealth.tn.gov.in, மற்றும் https://tnmedicalselection.net இணையதள முகவரிகள் வெயிடப்பட்டுள்ளன...