“டத்தோ” ராதாரவியா? வெறும் ராதாரவியா? தொடரும் டத்தோ கவுரவ சர்ச்சை!
தொடரும் சர்ச்சை... டத்தோ கொடுத்தவர் கைது!
நடிகர் ராதாரவி மீது பல்வேறு சர்ச்சைகள் சுற்றி சுழன்று வந்தாலும் சமீபத்திய பரபரப்பு சர்ச்சை ராதாரவி தன் பெயருக்கு முன் போடச் சொல்லி கட்டாயப்படுத்தும் "டத்தோ" என்ற கவுரவம் வாங்கப்பட்டதா?
வழங்கப்பட்டதா?
போட்டுக்கொண்டதா?
ஏன் இப்படி கேள்விகள் எழுகிறது என்றால்...
நம்மூர் அரசியவாதிகள் தொடங்கி சீப்பு சோப்புடப்பா விற்கும் தொழிலதிபர்கள் வரை தங்கள் பெயருக்கு முன்னால் "டாக்டர்" பட்டம் போட்டுக் கொ(ல்)ள்கிறார்கள்.
சரி "டத்தோ" என்கிற கவுரவம் மலேசிய மன்னர் குடும்பம் வழங்கும் ஒரு தனி கவுரவம்.
மலேசிய அரசு இந்தியாவில் ஷாருக்கான் ஒருவருக்கு மட்டுமே இந்த கவுரவத்தை வழங்கி உள்ளது.
சமீப காலமாக நடிகர் ராதாரவி தன் பெயருக்கு முன் டத்தோ என போட்டுக் கொள்கிறார். அதோடு அவர் நடிக்கும் படங்களிலும் டத்தோ ராதாரவி என்றே டைட்டில் போடச் சொல...









