செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

“டத்தோ” ராதாரவியா? வெறும் ராதாரவியா? தொடரும் டத்தோ கவுரவ சர்ச்சை!

 

தொடரும் சர்ச்சை… டத்தோ கொடுத்தவர் கைது!

நடிகர் ராதாரவி மீது பல்வேறு சர்ச்சைகள் சுற்றி சுழன்று வந்தாலும் சமீபத்திய பரபரப்பு சர்ச்சை ராதாரவி தன் பெயருக்கு முன் போடச் சொல்லி கட்டாயப்படுத்தும் “டத்தோ” என்ற கவுரவம் வாங்கப்பட்டதா?

வழங்கப்பட்டதா?

போட்டுக்கொண்டதா?

ஏன் இப்படி கேள்விகள் எழுகிறது என்றால்…

நம்மூர் அரசியவாதிகள் தொடங்கி சீப்பு சோப்புடப்பா விற்கும் தொழிலதிபர்கள் வரை தங்கள் பெயருக்கு முன்னால் “டாக்டர்” பட்டம் போட்டுக் கொ(ல்)ள்கிறார்கள்.

சரி “டத்தோ” என்கிற கவுரவம் மலேசிய மன்னர் குடும்பம் வழங்கும் ஒரு தனி கவுரவம்.

மலேசிய அரசு இந்தியாவில் ஷாருக்கான் ஒருவருக்கு மட்டுமே இந்த கவுரவத்தை வழங்கி உள்ளது.

சமீப காலமாக நடிகர் ராதாரவி தன் பெயருக்கு முன் டத்தோ என போட்டுக் கொள்கிறார். அதோடு அவர் நடிக்கும் படங்களிலும் டத்தோ ராதாரவி என்றே டைட்டில் போடச் சொல்லி அன்பு கட்டளை போடுகிறாராம்.

மீடு சர்ச்சை நாயகி சின்மயி சமீபத்தில் டப்பிங் யூனியனில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் வெளியிட்ட ஒரு பதிவில் ராதாரவிக்கு டத்தோ என்ற கவுரவம் யார் கொடுத்தது?
நாங்கள் தரவில்லை என மலேசிய அரசு விளக்கமளித்து விட்டது என்று அவர்கள் அனுப்பிய மெயில் தகவலை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டார்.
ராதாரவியிடம் கேட்டபோது தனக்கு டத்தோ கொடுத்த மன்னர்(?!) அவர்களோடு நான் நிற்கும் புகைப்படம் என் வீட்டு வரவேற்பறையில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒரு அத்தாட்சி சான்றும் இருக்கிறது” என்கிறார்.

நமக்கு கிடைத்த தகவலின்படி ராதாரவிக்கு டத்தோ கொடுத்த நூர் என்கிற நபர் மலேசியாவில் உள்ள மலாக்கா மாகாணத்தில் தன்னைத்தானே “சுல்தான்” என அறிவித்து கொண்டவராம்.
இவர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இப்படி அறிவித்து கொண்டார் என கடந்த 2014 ஆண்டே அந்த நூர் என்பவரை மலாக்கா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
அதோடு அவர் வழங்கியதாக சொல்லப்படும் எந்த கவுரவமும் செல்லாது எனவும் சொல்லிவிட்டார்களாம்.

நிஜம் இப்படி இருக்க… மோசடி என சிறையில் இருக்கும் ஒருவர் கொடுத்த டத்தோ கவுரவம் ராதாரவிக்கு அவசியமா என்பதை அவர் தான் தீர்மானிக்கவேண்டும்.

– கோடங்கி

440 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன