பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு உயர்வு : ஆளுநர் உரையில் அறிவிப்பு
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கனவு நனவாக முயற்சி எடுக்கப்படும். கூட்டமைப்பு நிறுவனங்கள் தொடங்க 100 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை 16 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். நிலைத்த வளர்ச்சி இலக்குகளை 2030ஆம் ஆண்...









