2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, மானியம் இல்லை – உ.பி., அரசு அதிரடி
உத்தரபிரதேச மக்கள் தொகை வரைவு மசோதாவில் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலைகள் இல்லை , அரசு மானியம் கிடைக்காது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் போட்டியிட முடியாது எனகூறப்பட்டு உள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன
உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் வரைவின் படி, உத்தரபிரதேசத்தில் இரு குழந்தைக் கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டு உள்...









