விவேக்கை தவிர எனக்கு வேறு யாருமில்லை - செல் முருகன் உருக்கம்!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ள இவர், சுற்றுச் சூழலிலும் ஆர்வம் கொண்டவர், இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான செல்முருகன், விவேக் குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டு...
விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!
தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.
அதன்பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்...
கொரோனா பாதிப்பால் இளம் நடிகர் மரணம்.... திரையுலகினர் அதிர்ச்சி!
கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத், இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெளியிடவும் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 35 வயதே ஆகும் மஞ்சுநாத், கொரோனா த...
விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை!
சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானார். இது திரை உலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் விவேக் ஈடுபட்டிருந்தார். 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்ட நிலையில் அவர் தனது இலக்கை அடையும் முன்னரே காலமாகிவிட்டார்.
இந்த நிலையில் விவேக் விட்ட பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆத்மிகா, மறைந்த விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆத்மிகா கூறும்போது, நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய மு...
திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பார்வதி!
கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழா கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டும் விழா நடைபெறாது என்று எதிர்பார்த்த நிலையில் வருகிற 23-ந்தேதி பூரம் விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
இதனை தமிழில் பூ, சென்னையில் ஒருநாள். உத்தம வில்லன், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி கடுமையாக சாடி உள்ளார். பூரம் திருவிழாவை நடத்தினால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள அவர் பூரம் விழாவை ரத்துசெய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே கொரோனா 2-வது அலை பரவி வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்துவதை கண்டித்தார். கும்பமேளா திருவிழாவில் திரண்ட கூட்டத்தையும் விமர்சித்தார். கும்ப மேளாவில் பங்கேற்ற 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. முககவசம் அணிவதை தீவிரப்படுத்த அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. என்றாலும், கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது.
இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வா...
இனி நான் 'பேபி' நயன்தாரா அல்ல.. மிஸ்.நயன்தாரா சக்ரவர்த்தி!
*ரஜினியுடன் நடித்த குழந்தை நட்சத்திரம்.
மலையாளத்தில் ' கிலுக்கம் கிலுகிலுக்கம் ' படத்தின் மூலம் அறிமுகமானவர் *' பேபி ' நயன்தாரா*. மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு,மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளும் பாராட்டுகளையும் பெற்றார். ரஜினியின் 'குசேலன்' படத்தில் நயன்தாராவுடன் நடித்தார் 'பேபி' நயன்தாரா. அப்போது முதல் நாள் என்னை பார்த்த நயன்தாரா சேச்சி என்னிடம்.. *" நீ தான் என் பெயரை திருடியவளா " என்று தமாஷாக கேட்டார்.
அதற்கு பேபி நயந்தாரா, நீங்கள் தான் என் பெயரை வைத்துள்ளீர்கள். நான் பிறக்கும் போதே நயன்தாராவாக தான் பிறந்தேன் வேண்டுமென்றால் என் பிறப்பு சான்றிதழ்/ birth certificate காட்டவா ? என்று நான் சிறுபிள்ளை ...
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்
https://twitter.com/RahulGandhi/status/1384442319638867969?s=19
...
ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முன்பதிவு செய்த தரிசன டிக்கெட் 90 நாட்களுக்கு செல்லும் - திருப்பதி தேவஸ்தானம்
கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்தது
ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் எண்ணிக்கையையும் பாதியாக குறைத்துள்ளது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலை...