சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்!

புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்! சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்....
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் –  ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் – ரம்யா பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் - ரம்யா பாண்டியன்! தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள ரம்யா பாண்டியன், “பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனால், அந்த நிகழ்ச்சியால் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதைவிட குக் ...
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆயுத பூஜை பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 15-ந்தேதி விஜயதசமி வருகிறது. தொடர்ச்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் நெரிசல் மூலம் மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் போக்குவரத்துத்துறை கவனமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு அதிகளவில் பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல ஆயுத பூஜைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கவும் ஏற்...
போன் நம்பர் கேட்ட ரசிகர்… உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

போன் நம்பர் கேட்ட ரசிகர்… உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
போன் நம்பர் கேட்ட ரசிகர்... உடனே ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்! தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் சமூக வலைத் தள பக்கத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசன் 100 என்று கிண்டலாக பதிலளித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்....
வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம்!

வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வைரலாகும் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம்! கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ள அவர், அதன் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பல லைக்குகளை...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட தனுஷ்... வைரலாகும் புகைப்படங்கள்! தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கீதாஞ்சலி. இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்டத்தில், நடிகர் தனுஷ், செல்வராகவன், நடிகை வித்யூலேகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்களை கீதாஞ்சலி செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது....
சிம்புவின் பத்துதல படத்தின் புதிய அப்டேட்!

சிம்புவின் பத்துதல படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்புவின் பத்துதல படத்தின் புதிய அப்டேட்! கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'மப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், 26.08.2021 அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் துவங்கியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் கௌதம் கார்த்திக் இணைந்து இருப்பதாக ப...
ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு!

ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு! நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பீஸ்ட் படக்குழு அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 13-ந் தேதி நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது போஸ்டரை வெளியிட உள்ளார்களாம். அதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களான அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளிலும் பீஸ்ட் படத்தின் இரண்டு முக்கியமான அப்டேட்கள் ...
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு! நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், வினய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, அர்ச்சனா, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இதில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியதோடு மாபெரும் வரவேற்பையும் பெற்றது. அண்மையில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் பட...
சமோசா மாதிரி இருக்கிறார்… ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ!

சமோசா மாதிரி இருக்கிறார்… ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமோசா மாதிரி இருக்கிறார்... ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ! நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் ஸ்ருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது காதலனுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் போது சமோசா மாதிரி இருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார். இந்த வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகிறது....