ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதி படம்! கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் இணைந்துள்ளது. இப்படத்தை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால், கடைசி விவசாயி படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எ...
முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் – சிம்பு நெகிழ்ச்சி!

முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் – சிம்பு நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
முதல் மில்லியனை எட்ட உதவிய ரசிகர்களுக்கு மில்லியன் நன்றிகள் - சிம்பு நெகிழ்ச்சி! தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதன்படி நடிகர் சிம்புவும் ஒரு காலத்தில் டுவிட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தார். பின்னர் திடீரென அதிலிருந்து விலகியிருந்த சிம்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் மீண்டும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இந்நிலையில், நடிகர் சிம்புவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள்’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல் டுவிட்டரில் நடிகர் சிம்புவை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகிறார்க...
சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்!

சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்! இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்த ஜிவி பிரகாஷ், ‘இந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள், அவரை பாடல் பதிவுக்குப் பயன்படுத்திக் கொள்வேன். மிகவும் திறமைசாலியாக இருக்கிறார். குறிப்புகள் மிக துல்லியமாக இருக்கின்றன' எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நெட்டிசன் ஒருவர், நாதஸ்வரம் வாசிக்கும் நபரின் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்தார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் ...
யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
யாஸ் புயலால் கடும் பாதிப்பு- ஒடிசா முதல்வருடன் பிரதமர் மோடி ஆய்வு! வங்க கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசாவின் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே நேற்று முன்தினம் கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. 10-க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. 3 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களான கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல் ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ராக் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார...
பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சர்ச்சையில் சிக்கியது!

பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சர்ச்சையில் சிக்கியது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அப்துல் பாருக் உத்தரவிட்டார். மேலும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். https://youtu.be/9A3hhkweDAk 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூகவலைதளத்தில் வெளியாயின. இதையடுத்து பள்ளி ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
பிரபாஸ் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில்  நடிக்கிறாரா? – ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்!

பிரபாஸ் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்கிறாரா? – ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்கிறாரா? - ஹாலிவுட் இயக்குனர் விளக்கம்! ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் பிரபாசுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்தன. தற்போது இந்திய அளவில் பிசியான நடிகராக வலம்வரும் பிரபாஸ், டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வந்தது. நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றபோது, ‘மிஷன் இம்பாசிபில் 7’ படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரேயிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டர் வாயிலாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்குவாரே, “பிரபாஸ் மிக திறமையான மனிதர் தான். ...
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது துபாய் அரசு! அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும். இந்த விசாவை பெற பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விண்ணப்பித்தார். இதனை பரிசீலனை செய்த துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையின் பொது இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி, சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசா வழங்கினார். நடிகர் சஞ்சய் தத் அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ...
தொடர்ந்து நடிக்க ஆசை…. உடல் ஒத்துழைக்குமான்னு தெரியல ரஜினி உருக்கம்!

தொடர்ந்து நடிக்க ஆசை…. உடல் ஒத்துழைக்குமான்னு தெரியல ரஜினி உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தொடர்ந்து நடிக்க ஆசை.... உடல் ஒத்துழைக்குமான்னு தெரியல  ரஜினி உருக்கம்! ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. தற்போது சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி அடுத்த மாதம் அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். நடிகர் தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்க, மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளார். ரஜினியும் அவர்களுடன் தங்கி இருப்பார் என்று தெரிகிறது. கொரோனா பரவல் குறைவதை வைத்தே அவரது பயண திட்டம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? இல்லையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முட...
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!

தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்! தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதில் உள்ள மும்மொழிக்கொள்கை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் கடுமையாக எதிர்க்கப்பட்டன. அதேநேரம், தாய்மொழியில் கல்வி கற்கவேண்டும் என கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தாய்மொழியில் கல்வி பயில்வதை ஊக்குவிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய 8 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவ...
30 நாட்கள் பரோல் கேட்டு முதல்-அமைச்சருக்கு நளினி, முருகன் கடிதம்!

30 நாட்கள் பரோல் கேட்டு முதல்-அமைச்சருக்கு நளினி, முருகன் கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
30 நாட்கள் பரோல் கேட்டு முதல்-அமைச்சருக்கு நளினி, முருகன் கடிதம்! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் 29 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, முருகன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நளினி, முருகன் ஆகியோர் தனித்தனியாக வேலூர் மத்திய ஜெயில் சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினியிடம் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்க...