ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

HOME SLIDER, NEWS, politics
சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவில் இருந்து நீக்கம் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரசேகரன். இவர் இந்த தேர்தலில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். கட்சி தலைமை இவருக்கு பதிலாக எஸ்.சந்திரன் என்பவரை நிறுத்தியது இதனால் அதிருப்தி அடைந்த சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் கொல்லிமலையில் ஆர்ப்பாட்டம் செய்தார். இந்த நிலையில் அவர் சுயேச்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார். இதையடுத்து சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சின்னகார வள்ளியில் தேர்தல் அலுவலகம் திறந்தார். இதனிடையே அவர் தேர்தலில் போட்டியிடும் தனக்கு சிலர் பிரச்சனை செய்யக்கூடும் என்றும், பிரசாரத்தின் போது அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ்...
பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி!

பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி!

HOME SLIDER, NEWS, politics
  பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி! தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கு கூட சொந்த வாகனம் இல்லாமல் அதே விஜயகாந்த் மனைவி பிரேமலதா, டிடிவி தினகரனிடம், பிரசார வாகனத்தை பெற்றுள்ளார். இதை அறிந்த தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துபோய் இருக்கிறார்கள். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரச்சார வேன், தினகரனால், பிரேமலதா விஜயகாந்த்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில்தான் விருத்தாசலம் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளாராம். இந்த நிலையில்தான், டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணியில் இணைந்ததற்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தார். அத்தோடு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரச்சார வேனை பிரேமலதா விஜயகாந்த்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அன்பளிப்பாக வழங்கி வந்திருக்கிறார் ...
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட  திருநங்கை ஒருவர் மனுத்தாக்கல்!

மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட திருநங்கை ஒருவர் மனுத்தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics
  தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட முதன்முறையாக திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மகனுக்கு முருகன் பெயர் சூட்டிய கார்த்தி….

மகனுக்கு முருகன் பெயர் சூட்டிய கார்த்தி….

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
  மகனுக்கு முருகன் பெயர் சூட்டிய கார்த்தி... நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்கு ‘கந்தன்’ என்று முருக கடவுளின் பெயரை சூட்டி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்....
 சீட் இல்லை… சுயேட்சையாக போட்டியிட போகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் 

 சீட் இல்லை… சுயேட்சையாக போட்டியிட போகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் 

HOME SLIDER, NEWS, politics
சீட் இல்லை... சுயேட்சையாக போட்டியிட போகும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு தாக்கல் செய்தார். மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்காமல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் என்பவருக்கு அ.தி.மு.க.வில் சீட் வழங்கப்பட்டது. இதனால் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வேட்பாளரை மாற்ற வேண்டும் என...
பிரபலங்களுக்கான ‘ராக்ஸ்டார்’  ரியாலிடி இசை நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல்…

பிரபலங்களுக்கான ‘ராக்ஸ்டார்’  ரியாலிடி இசை நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல்…

CINI NEWS, HOME SLIDER
பிரபலங்களுக்கான ‘ராக்ஸ்டார்’  ரியாலிடி இசை நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல்... ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 28 முதல் ஞாயிறு தோறும் இரவு 07.30 – 09.30 வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத் (டிஎஸ்பி), மனோ மற்றும் ஸ்ரீநீவாஸ் நடுவர்களாகப் பங்கேற்பர். புனைகதை (Fiction) மற்றும் புனைகதை அல்லாத (Non-Fiction) மூலம் மிகச் சிறந்த பொழுதுபோக்கைத் தனது ரசிகர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஜீ தமிழ் புதிய நிகழ்ச்சி மூலம் மற்றுமொரு ஆச்சரியத்தை ரசிகர்களுக்கு  தர இருக்கிறது. இசை ரியாலிடி நிகழ்ச்சிகளிலேயே அதிக ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதுமையான வடிவில் நிகழ்ச்சியை சேனல் அறிமுகப்படுத்த உள்ளது. ‘சரிகமப’ மற்றும் ‘பேட்ட ராப்’ ஆகிய நிகழ்ச்சிகளின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து தனது ரசிகர்களுக்காக ‘ராக்ஸ்டார்’ என்னும் பிரபலங்களுக்கான இசை ரியாலிடி நிகழ்ச்சியை இவ்வாண்டு வழங்...
மணாலியில் லெஜண்ட் சரவணன் ரொமான்ஸ்!

மணாலியில் லெஜண்ட் சரவணன் ரொமான்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மணாலியில் லெஜண்ட் சரவணன் ரொமான்ஸ்! தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் லெஜண்ட் சரவணன், நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கும் ரொமாண்டிக் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் லெஜண்ட் சரவணன் நடித்த ...
ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ 

ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள்
ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். இதனை திரைப்பட...
சட்டசபை தேர்தல் – தலைமறைவாக இருந்த 14 ஆயிரம் ரவுடிகள் கைது!

சட்டசபை தேர்தல் – தலைமறைவாக இருந்த 14 ஆயிரம் ரவுடிகள் கைது!

HOME SLIDER, NEWS, politics
சட்டசபை தேர்தல் முன்எச்சரிக்கை- தலைமறைவாக இருந்த 14 ஆயிரம் ரவுடிகள் கைது தமிழக சட்டசபை தேர்தலையொட்டி முன் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக டி.ஜி.பி. அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் 21 ஆயிரத்து 289 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 732 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 18 ஆயிரத்து 183 பேர் நன்னடத்தை பிணைய பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர். நீதிமன்றத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 14 ஆயிரத்து 343 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனிநபர் பாதுகாப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த 18 ஆயிரத்து 593 துப்பாக்கிகள் திரும்ப பெறப்பட்டன. தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், மதுரை ...
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்

திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக வேட்பாளருக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கிய காங்கிரஸ் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக  முருகன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேப்பனப்பள்ளி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. வேட்பாளரை அறிவித்தது அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வேப்பனப்பள்ளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பச்சிபாறை கிராமத்தில் ஒன்று கூடினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. வினர் உள்ளடி வேலைகள் பார்த்து காங்கிரசை தோற்கடித்தனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு புகார் செய்தும் கண்டிக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க போவதில்லை’ என்று கூட்டத்த...