வெள்ளிக்கிழமை, அக்டோபர் 9
Shadow

பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி!

 

பிரேமலதா தேர்தல் பிரச்சாரத்திற்கு 20 லட்சம் மதிப்பில் சொகுசு வேன் வழங்கிய டிடிவி!

தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கு கூட சொந்த வாகனம் இல்லாமல் அதே விஜயகாந்த் மனைவி பிரேமலதா, டிடிவி தினகரனிடம், பிரசார வாகனத்தை பெற்றுள்ளார். இதை அறிந்த தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துபோய் இருக்கிறார்கள். 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரச்சார வேன், தினகரனால், பிரேமலதா விஜயகாந்த்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதில்தான் விருத்தாசலம் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளாராம்.

இந்த நிலையில்தான், டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணியில் இணைந்ததற்கு நன்றியும் வாழ்த்தும் சொல்லிவிட்டு வந்தார். அத்தோடு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பிரச்சார வேனை பிரேமலதா விஜயகாந்த்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அன்பளிப்பாக வழங்கி வந்திருக்கிறார் டிடிவி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன