Sony LIV வழங்கும் ‘கன்கஜூரா’, வெளியில் அமைதியாகத் தோன்றும் பின்னணியில் பதற்றமூட்டும் ஒரு கதை!
இருண்ட ரகசியங்கள். ஆழமான குற்றவுணர்வு.
'கன்கஜூரா' டிரெய்லர் கடந்த காலத்தின் மறக்கமுடியாத ஒரு பயணத்தை நமக்கு உறுதி அளிக்கிறது".
Sony LIV வழங்கும் 'கன்கஜூரா', வெளியில் அமைதியாகத் தோன்றும் பின்னணியில் பதற்றமூட்டும் ஒரு கதையை சுட்டிக்காட்டுகிறது – அங்கு அமைதியே ஏமாற்றமளிக்கிறது, மேலும் மறைந்திருக்கும் உண்மைகள், வெளியே தெரிவதைவிட அதிகம் அபாயகரமாக இருக்கின்றன.
இந்த டிரெய்லர் குற்றவுணர்வும், இருண்ட ரகசியங்களும், பழிவாங்க விரும்பும் உள்ளம், கடந்த காலம் என்று மாறும் ஒரு உலகத்தை உருவாக்குகிறது. விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட இஸ்ரேலிய தொடர் Magpie-இன் அதிகாரப்பூர்வ இந்தியத் தழுவலான 'கன்கஜூரா', இந்திய உணர்வுகளோடு கூடிய தீவிரமான மனநிலைக்கு ஏற்றபடி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கதை இரு சகோதரர்கள் தங்களது இருண்ட கடந்த காலத்தை எதிர்கொள்வது மற்றும் நினைவுகளுக்கும் ...









