செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

சூர்யாவுக்காக எழுதப்பட்டது சண்டக்கோழி 2 கதை – விஷால்

 

சண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சண்டக்கோழி படம் எனக்காக எழுதப்பட்டது இல்லை என்று விஷால் கூறியுள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சண்டக்கோழி 2’.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது பேசிய விஷால் கூறுகையில், இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, சண்டக்கோழி படத்தைப் பற்றி கூற விரும்புகிறேன். சண்டக்கோழி படத்தின் கதை எனக்காக எழுதப்பட்டது கிடையாது. முதலில் சூர்யாவுக்காகத் தான் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக கதையைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, லிங்குசாமியை சந்தித்து இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றேன். சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்றார். இதையடுத்து, சண்டக்கோழி படத்தில் நான் நடித்தேன். ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இப்படம் எனக்கு ஆக்‌ஷன் ஹீரோ என்ற ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆந்திரப்பிரதேசத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது என்னுடைய 25வது படத்தில் நான் நடித்து முடித்துவிட்டேன். சண்டக்கோழி 2 எனது 25வது படமாக இருக்கிறது என்று எண்ணும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படம் எனது வரலாற்றில் முக்கியமான படமாக இருக்கும்.

383 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன