
7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!
நடிகர் ரஜினிகாந்த் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் என்றே தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்திய அவரது பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாம் அவரை பொதுமக்கள் மத்தியில் கேலிக்ககூத்தாக்கும் விதமாகவே அமைந்துவிடுகிறது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ‘7 பேரின் விடுதலையை ரத்து செய்தது குறித்த கேள்விக்கு’ நேரடியாக பதில் சொல்லாமல் ‘எந்த ஏழு பேர்?’ என்று எதிர் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், ‘நான் இப்பதான் கேள்விப்படுகிறேன்… இப்பதான் வர்றேன்’ என்றும் பதில் சொல்லி இன்றைய நெட்டிசன்களின் மீம்ஸ் கலாட்டாவில் சிக்கிக் கொண்டார்.
உண்மையிலேயே ரஜினிகாந்த்துக்கு ராஜீவ் கொலையாளிகளான 7 பேரின் விடுதலை குறித்து செய்தி தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும், அதேநேரம், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாகவே ரஜினிகாந்த் செயல்படுவதால் 7 பேரின் விடுதலை விவகாரத்தில் தேவையில்லாமல் கருத்து சொல்லக் கூடாது என்பதால் மழுப்பல் பதில் சொல்லி தப்பியிருக்கிறார் ரஜினி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதோடு, பாஜகவை பகைத்துக் கொள்ள ரஜினி விரும்பவில்லை என்பதாலும், 7 பேரின் விடுதலை முடிவை ஜனாதிபதியின் கவனத்திற்கே கொண்டு செல்லாமல் மத்திய அரசு ரத்து செய்த விவகாரத்தில் எந்த கருத்தை கூறினாலும் மத்திய அரசை எதிர்த்து பேசுவதுபோல ஆகிவிடும் என்பதாலும் ரஜினி நழுவிக்கொண்டார் என்ற கருத்தும் ஒருபக்கம் நிலவுகிறது.

தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒருவர் அரசிலுக்கு வந்து ஆட்சியை பிடிக்கப்போகிறேன் என்று கூட்டத்துக்கு கூட்டம் பேசி கைத்தட்டல் வாங்குவது எதற்காக அடிப்படை விஷயங்களே தெரியாதவர் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது நியாயமா என்றும் நெட்டிசன்கள் இன்றைய நாளை ரஜினியை வைத்து மீம்ஸ் போட்டு கொண்டாடி விட்டார்கள்.
நிஜத்தில் ரஜினிகாந்த் பெரும் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. அதற்கு பெரும் காரணம் அவரது குடும்ப விவகாரங்கள்தான். கணவர் வேண்டாம் என குழந்தையோடு வீட்டுக்கு வந்து சேர்ந்து விவாகரத்து வாங்கிக் கொண்ட சவுந்தர்யா இப்போது மீண்டும் ஒரு நடிகரை கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள். போதாகுறைக்கு ஆளும் மத்திய பாஜக அரசு தேர்தலுக்கு முன்பு எப்படியாவது ரஜினியை தங்கள் கட்சிக்கு வளைத்துக் கொள்ள பலவகையில் அழுத்தம் கொடுத்து வருகிறது இதனாலேயே அரசியல் கட்சி அறிவிப்பு விஷயத்தில் ரஜினி ஒரு தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார். இப்படி பல முனைகளில் இருந்தும் அவருக்கு அழுத்தங்கள் வருவதால் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
எது எப்படியோ முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளாமல் சினிமா ஷூட்டிங் போல வசனங்கள் பேசினால் எடுபடுமா என்பதை அவரோடு பழகி வரும் நண்பர்கள் சொன்னால் நல்லது.

906 Views
