வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

குழந்தை திருமணத்திற்கு ஆதரவாக பேசிய பா.ஜ.க. – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

 

ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 7ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.  இந்த நிலையில், சோஜத் சட்டசபை தொகுதியின் பெண் வேட்பாளராக போட்டியிடும் பா.ஜ.க.வின் சோபா சவுகான் என்பவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
அவர் பேசும்பொழுது, குழந்தை திருமணம் நடைபெற தடையாக இருக்கமாட்டேன் என கூறினார்.  தடை செய்யப்பட்ட குழந்தை திருமணம் ராஜஸ்தானில் சில இடங்களில் இன்னும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சவுகானுக்கு இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்
ஆட்சி அதிகாரத்திற்காக மதத்தின் பெயராலும், சடங்கு சம்பிரதாயங்களின் பெயராலும் பல பொய் வாக்குறுதிகளை கொடுப்பது பாஜகவுக்கு ஒன்றும் புதிதில்லை. மத்தியில் ஆட்சியை பிடிப்பதற்காக நாட்டு மக்களுக்கு பல பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துக் கொண்டு நாட்டை சீர்கெடுத்துக் கொண்டிருக்கும் பாஜக மீண்டும் தனது பொய் பித்தலாட்டங்களை வாக்குறுதிகள் என்ற பெயரில் அரங்கேற்ற தொடங்கியிருக்கிறது என மக்கள் மத்தியில் பரவலான கருத்தாக பேசப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன