சனிக்கிழமை, ஆகஸ்ட் 1
Shadow

நாசர் மகனின் பிறந்த நாளில் சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் கலந்த விஜய்..!

 

விபத்தில் சிக்கி சிகிச்சை எடுத்துவரும் நடிகர் நாசரின் மகன் பிறந்தநாளை நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டியுள்ளார்.

நடிகர் விஜய் -க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் ரசிகர்களாக இருக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமில்லாமல், பல பிரபலங்களும், அவர்களின் குடும்பத்தினரும் விஜய்யின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதனாலோ என்னவோ விஜய் தன் ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவராக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் நாசரின் மகன் ஃபைசல் தீவிர விஜய் ரசிகர். சில வருடங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய ஃபைசல், கடந்த நான்காண்டுகளாக வீட்டிலிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார். தனது பிறந்த நாளுக்கு விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என்பது ஃபைசலின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஃபைசலின் இந்த கனவு நினைவாகியிருக்கிறது. ஃபைசலின் பிறந்தநாளான நேற்று நாசர் வீட்டுக்கு சென்று கேக் வெட்டி, ஃபைசலின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார் விஜய். பிறந்தநாள் படங்களை டிவிட்டரில் பகிர்ந்த கமீலா நாசர், ‘ஃபைசல், விஜய் அண்ணனுடன் உனது கனவு நினைவாகியிருக்கிறது, பிறந்தநாள் வாழ்த்துகள்’ என வாழ்த்தியிருக்கிறார்.

639 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன