அடல்ஸ் ஒன்லி… டோன்ட் ரீட் குட்டீஸ்… ரீட் ஒன்லி அபவ் 18+ விமர்சனம்…

முன்னெல்லாம் குழந்தை குட்டியோட போய் பாக்குற மாதிரியான படங்களில் நடித்து வந்த விமல் முதல்முறையா குழந்தை இல்லாம குட்டியோட போனாலும் குழந்தை குடுக்குற மாதிரியான படத்துல நடிச்சிருக்கார் அதுதான் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு.

படத்தின் பெயரைப்போலவே படம் தொடங்கியதில் இருந்து முடிகிறவரைக்கும் காம நெடியும்… காமெடியும் கலந்து கட்டி அடிக்கிறது… சில நேரங்களில் உச்சகட்ட ஆபாசம் தலை தூக்கினாலும் அந்த நேரத்திற்கு படம் பார்க்கிறவர்கள் சிரித்து விட்டு சே என்ன கருமம்டா இதற்கு போயா நாம் சிரித்தோம் என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை காமநெடிகள்…

கதைன்னு சொல்லனும்னா ரொம்ப கஷ்டம்… அதேநேரம், சிங்கம்புலி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்னு படம் முழுக்க வந்து அவங்க அவங்க பார்ட்டை ஒழுங்கா செய்துட்டு போறாங்க. ஆனந்தராஜ் காமெடி வில்லனா வந்து வழக்கம்போல அதகளம் பண்ணாலும் மன்சூர் நிலைமைதான் ரொம்ப பாவம்… ஒரு பக்கம் பொண்டாட்டி இன்னொரு பக்கம் செட்டப்புன்னு ரெண்டு பக்கமும் அடி வாங்குறாரு… இதுல நல்ல போலீஸ் ஆபீசராம் அவரு.

பூர்ணா ஒரு போலீஸ் அதிகாரியா வந்தாலும் அந்த கண்ணு ஒண்ணால கிறுக்குப்பயபுள்ளங்கை கிளாமராதான் பாப்பாங்க… ஏன்னா அம்மணி போட்டிருக்கிற சிவப்பு கலர் டீ சர்ட் அம்புட்டு டைட்டு… அதுக்கு ஏத்தா மாதிரியே விமலையும்… சிங்கம்புலியையும் துரத்திகிட்டு அம்மணி ஓடும்போது… ஓடும்போது… முன்னாடி கேமரா… அம்மணி ஓடிவர்றதை கேமராவும் முன்னாடி ஓடியே படம் புடிச்சிருக்கு… பாக்குறவங்களுக்கு கட்டாயம் மூச்சு வாங்கும்…

கதாநாயகி ஆஷ்னா… அம்மணி போட்டிருக்கிற காஸ்டியூம் என்னமாதிரியான தாவணின்னு எல்லாரும் கேப்பாங்க… தாவணி போட்டா மாதிரியும் இருக்கனும் போடாதமாதிரியும் இருக்கணும்… சிம்பிளா சொல்லனும்னா ‘ஈயம் பூசன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்’னு ஒரு காமெடி இருக்கில்ல அதுமாதிரி… ஆஷ்னா முதல் காட்சியிலந்து கடைசிகாட்சிவரைக்கும் மூச்சு முட்ட முட்ட கிளாமருக்கு முட்டு குடுத்திருக்காரு… விமல் கிட்ட வந்தாலே ‘நான் கண்ண மட்டும் மூடிக்கிறேன்… நீ என்ன வேணா எடுத்துக்கோன்னு’ கேமராமேனுக்கு சொல்லிட்டாரு போல கண்ணாபின்னான்னு கண்ட கண்ட இடத்துல எல்லாம் கேமரா போய் வந்து படம் பாக்குறவங்க லென்ச கழட்டி துடைக்க வைச்சிடுது…

ஹாலிவுட்ல ‘அந்த’மாதிரி படங்களில் நடிச்சி ரொம்ப பேமஸ் ஆன நடிகைதான் மியாராய்… இந்த அம்மணி வேற யாருமில்ல சன்னிலியோன் கசின் சிஸ்டராம்…
ஏற்கனவே ‘அந்த’ மாதிரி படங்களில் நடிச்சிட்டதால நம்மூர் கிளாமர் அளவுகோல்… குச்சி எல்லாம் அம்மணிக்கு அவசியமில்லாம போயிடுச்சி… ஆம்பளைய அடக்கி ஆளும் பொம்பள வேஷம்… அட கருமமேன்னு யோசிச்சாலும்… எவ்ளோ நாளைக்குத்தான் ஹீரோயின கட்டி வைச்சி கற்பழிக்கிறது… ஒரு சேஞ்சுக்கு ஹாலிவுட் அம்மணிகிட்ட ஹீரோ சிக்கிகிறாரு…

களவாணிப்பய விமலுக்கு என்ன ஆச்சின்னு கேக்குறாப்புல ஒரு படம்.
காரணம், விமலோட முந்தைய படங்கள் எல்லாமே குடும்பத்தோட குழந்தை குட்டியோட வந்து பாக்குற மாதிரி இருக்கும்…. ஆனா இஎமஇ படத்துக்கு குட்டியோட போனா குழந்தை குடுக்கலாம்… அந்தளவுக்கு காமநெடி கலந்திருக்கு… வழக்கமான நக்கல் நையாண்டி துறுதுறு எல்லாம் இருந்தாலும் ‘அந்த’ சமாச்சாரங்கள் கொஞ்சம் ஓவர் டோஸ்தான் போங்க…

படத்தோட இயக்குனர் முகேஷ் தமிழ் பட ஆடியன்ஸ் பல்ஸ் புடிச்சி படமெடுத்தாரா… பல்ஸ் எகிற படம் எடுத்தாரான்னு தெரியல… ஓவர் டோஸ் சினிமானாலும் ஆடியன்சையும் குறிப்பா தியேட்டர்காரங்களையும் அதிகமா கவர் பண்ற படமா இஎமஇ படம் இருக்கும்..!

கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *