ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென ராஜினாமா

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை தேர்வு செய்ததாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக பதவி வகித்ததை பெருமிதமாக நினைப்பதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை ஒரு ராத்திரியில் திடீரென நடுத்தெருவில் நிற்க வைத்த பெருமைக்குரிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம்ராஜன் திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதில் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார். மத்திய மோடி அரசின் இந்த நடவடிக்கை அப்போதே பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென செப்டம்பர் 8ம் தேதி இரவு நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த இந்திய கரன்சிகளில் உயர்ரக கரன்சியான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.


கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் பெரும் ஊழல் இருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டின. அதற்கு வலு சேர்க்கும் விதமாக ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிப்பதற்கு முன்பு பாஜக கட்சியின் சொத்து மதிப்பும் அதன்பிறகு அவர்கள் கட்சியின் சொத்து மதிப்பும் பல மடங்கு திடீர் உயர்வை சந்தித்ததை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி குற்றம் சுமத்தியது.
மேலும், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் சாமானிய மக்கள் அனைவரும் கையில் உள்ள பழைய கரன்சிகளை மாற்ற நடுத்தெருவில் பல மணிநேரங்கள் காத்திருந்தனர். அதில் பல இடங்களில் உயிரிழப்புகளும் நடைபெற்றது. இத்தனைக்கும் காரணமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் என்ற ஒன்றை ஒழித்து விட்டதாக மத்திய அரசு சொல்லிக் கொண்டாலும் அதில் உண்மை எதுவும் இல்லை என்றே மக்கள் பேசத் தொடங்கினார்கள்.


அதன்பிறகு கலர் கலரான கரன்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லிக் கொண்டு ஆட்சியை பிடித்த மோடி சர்க்கார் கருப்பு பணத்தை பிடிப்பதற்கு பதில் கலர் கரன்சிகளை கொண்டு வந்ததுதான் மிச்சம் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
நாடு முழுவதும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழில்கள் முடங்கின. கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு பறிபோனது. கோடிக்கணக்கில் பலருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.
நாட்டு மக்களை பெரிதும் வாட்டி வதைத்த இந்த நடவடிக்கை மோடிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரப்போவதால் தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக இந்த விவகாரம் மக்கள் மனசில் நீங்காமல் பாஜகவுக்கு எதிராக எதிரொலிக்கும் என்பதால் அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். வழக்கம்போல ராமர்கோயில் கட்டுவோம் என்ற பழைய பல்லவியை பாடத் தொடங்கியிருக்கிறார்கள் பாஜகவினர்.

சமீப காலமாக மத்தியில் உள்ள மோடி அரசின் பல செயல்பாடுகளால் உலக அளவில் டாலருக்கு நிகரான இந்திய கரன்சியின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக நாடுமுழுவதும் கடும் விலை வாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது.
சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் ரிசர்வ்வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் ராஜீனாமா செய்வார் அல்லது நீக்கப்படுவார் என கூறப்பட்டது.
ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் இது குறித்து கருத்து தெரிவித்த உர்ஜித் எந்த சூழலிலும் நான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றார்.
ஆனால், அப்படி சொன்ன 3 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் உர்ஜித். இதற்கு மத்திய மோடி அரசின் அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.


 மக்களை பாடாய் படுத்தி நடுத்தெருவில் நிறுத்திய பணமதிழப்பிழப்பு நடவடிக்கைக்கு முழு காரணமாக இருந்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்கள் என கூறப்பட்டாலும் மத்திய அரசுடன் சமீபகாலமாக அவர் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார் என்றும், பிரதமர் மோடியின் பல்வேறு உத்தரவுகளை அவர் செயல்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் உச்சகட்டமாக இந்த ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வரும் நிலையில், உர்ஜித் பட்டேல் இவ்வாறு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன