ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின், இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக புகார் அளித்திருந்தார்.

தேவராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
அரசின் இலவச பொருட்களை இனி விமர்சிக்கமாட்டேன் என்றும் ஏற்கனவே சர்கார் படத்தில் காட்சிகள் வைத்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அரசின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த முருததாஸ் தரப்பு ‘பகிரங்க மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், இனி வரும் படங்களில் இலவச பொருட்களை விமர்சிக்கமாட்டேன் என்று எந்த உறுதியும் தர முடியாது’ என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் விடாது கருப்பு போல சர்கார் சர்ச்சை முருகதாசை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.

