ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

சிலுக்குவார்பட்டி சிங்கம் விஷ்ணு விஷாலுக்கு கைகொடுத்த உதயநிதி ஸ்டாலின்

ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஓவியா நடித்துள்ளார்கள். மேலும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பெற்றிருக்கிறார். 


அன்றைய தினத்தில் ‘அடங்க மறு’, ‘சீதக்காதி’, ‘மாரி 2’, ‘கனா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன