காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!

காற்றில் பறந்த அரசு ஆணை
உச்சத்தில் டிக்கெட் விலை
கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!

ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் இரு படங்களும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
இரு நடிகர்களும் வியாபார ரீதியாக பேசப்படும் நடிகர்கள் என்பதால் இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.


அரசு நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி தராத போதும் சில இடங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது.
அதோடு கோர்ட் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு பிரமாண்டமான கட் அவுட்களும் தியேட்டரை மறைக்கும் பிரமாண்டமான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது.
அதே போல டிக்கெட் விற்பனையில் அரசின் உத்தரவு எதுவும் பின்ப்ற்றப் படவில்லை. ஆயிரங்களில் டிக்கெட் விலை. லோக்கல் போலீசாருக்கு இந்த விதிமீறல்கள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறார்கள்.
ரஜினி அரசியல் பரபரப்புகளுக்கிடையில் பேட்ட வந்திருப்பதால் இது அவரது அரசியலுக்கு எந்தளவு கை கொடுக்கும் என்பது பட ரிசல்ட்டில் தெரிந்து விடும்.

  • கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *