வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: ரஜினிகாந்த்

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குநடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து !

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குநடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்களை பெருமைப்படுத்தியதற்...
ஜெயிலரில் இணையும் ஜெய் !

ஜெயிலரில் இணையும் ஜெய் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும், இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
ஜெயிலர்  ஃபர்ஸ்ட் லுக் –  உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். நேற்று ஜெயிலர் படத்தின் அறிவிப்பு (22.8.2022) காலை 11:00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/sunpictures/status/1561586499132559371?ref_src=tw...
மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த் வாழ்த்து!

மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் – ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் க...
‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் – ரஜினி மகள் விருப்பம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘அண்ணாத்த’ கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் - ரஜினி மகள் விருப்பம்! சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம், வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ படத்தைப் பார்த்த ரஜினியின் மகள் சௌந்தர்யா. படத்தைப் பற்றி தனது ஹூட் செயலில் போட்ட குரல் பதிவில், “படம் பார்த்துவிட்டு கண்களில் கண்ணீருடன் சிவா சாருக்கு நன்றி சொன்னேன். நீங்கள் செய்திருப்பது மேஜிக் என்பதையும் தாண்டி சொல்ல வார்த்தைகள் இல்லை. தலைவரும் - நீங்களும் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் கூறியிர...
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்!

நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? – வெளியான புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா? - வெளியான புதிய தகவல்! திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ரஜினிகாந்த் இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்த...
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்! திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வ...
நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன். கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டா கத்திக் கொண்டு வெட்டி பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோ...
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்!

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்ற ஷங்கர் மகள்! இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மருது, கொம்பன் போன்ற படங்களை இயக்கி பிரபலமான முத்தையா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகை அதிதி, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகும் அதிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், அதிதியை நேரில் அழைத்து வாழ்த்தி உள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற நடிகை அதிதி, அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங...
அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம் !

அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்க இருப்பதாகவும், இப்படத்தை ரஜினியின் மகள்க...