ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்குநடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து !

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும் இந்திய சினிமாவுக்கான கோல்டன் குளோப் விருதை வீட்டிற்கு கொண்டு வந்ததற்காகவும் கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

319 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன