வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

விவசாயம் காப்போம்… விவசாயி மனம் குளிர செய்வோம் – TMJA பொங்கல் வாழ்த்து

எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும்வாழ்வில் வசந்தம் வீசட்டும்தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பொங்கல் வாழ்த்து (TMJA)


உலகம் முழுதும் உள்ள தாய் தமிழ் உறவுகளுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளரர்கள் சங்கம் சார்பில் தமிழர் திருநாளாம் தை திங்கள் நாளில் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

விவசாயம் செழிக்க, விவசாயிகள் மனம் குளிர இந்த தை திருநாளில் திருமகள் அருள் தமிழ் மண்ணில் முளைக்கட்டும்… உங்கள் எண்ணங்கள் ஏற்றம் பெறட்டும். மகிழ்ச்சிகள் தொடர்ந்து வாழ்வில் வசந்தம் வீசட்டும்…

வறட்சியை போக்கவும், இயற்கை சீற்றங்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் மண்ணையும், மக்களையும் பாதுகாக்க இந்த தை திருநாளில் விவசாயத்தை காப்போம் என்று தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்…

திரைப்படங்கள் மூலம் சொல்லும் கதைகளில் நாட்டின் நலனையும், மக்களின் தேவைகளையும் சொல்வோம்… ஆட்டம் பாட்டங்களோடு அவசியங்களையும் குறிப்பாய் சொல்வோம்…

நாகரீக வளர்ச்சியின் மோக மேகங்கள் தேவையான போது மட்டும் வந்து மழையாக பொழிந்து பின் கலைந்து செல்லட்டும்… மேகங்கள் கலைந்தபின் தெளிந்த வானமாக விவசாயம் பரந்து விரிந்து செழிக்க நம்மால் ஆன பணியை செய்வோம்…

இயற்கை மழையாய் அளிக்கும் நீரை சேமித்து காக்கும் ஏரி குளங்களை ஆக்ரமிக்க விடாமல் அப்படியே வைத்து நீராதாரத்தை காப்போம் என உறுதி ஏற்பபோம்…உலகை மிரட்டும் அழியா பிளாஸ்டிக்கை தவிர்த்து மக்கும் உரமாய் மண் வளம் காப்போம்…

முடிந்த மட்டும் ஆளுக்கொரு மரமாவது வளர்ப்போம்… அல்லது நடுவோம்…மதங்கள் பெயரால் ஒருபோதும் மனிதம் துண்டாட அனுமதியோம் என்ற உறுதியை உரக்கச் சொல்வோம்…

மனிதநேயம் காப்போம்… இயற்கையை நேசிப்போம்… உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியின் குடிமக்கள் நாம் என்ற பெருமையை உலகுக்கு நம் செய்கையால் எடுத்து சொல்வோம்… அன்பால் மனங்களை வெல்வோம்.


இனிய தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவிப்பதில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் பெருமிதம் கொள்கிறது. 

அன்புடன்

கோடங்கி , செயலாளர்


881 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன