வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயாரா? -மு.க.ஸ்டாலின்

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 20-க்கும் அதிகமான எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை தாக்கிப்பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ரபேல் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடி தயாரா? என இன்று கேள்வி எழுப்பியுள்ளார்

சோழிங்கநல்லூரில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ இல்லத் திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு லோகேஷ் – ஜெயஸ்ரீ திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

தனது பேச்சினிடையே, ரபேல் போர் விமான பேரம் விவகாரத்தில் சமீபத்தில் ஆங்கில நாளிதழில் வந்த தகவலை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், பா.ஜ.க. தலைமையிலான நான்கரை ஆண்டு மத்திய அரசில் ஊழலே நடக்கவில்லை என்று கூறும் உரிமை மோடிக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் பாதுகாப்பில் மோடியைவிட தி.மு.க.வுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அதிக அக்கறையுள்ளது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
ரபேல் விவாகரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யுரைத்து வருவதாக மீண்டும் மீண்டும் வெற்றுப் பிரசாரம் செய்வதை தவிர்த்துவிட்டு பிரதமர் பதவிக்காக கண்ணியத்தை நிலைநாட்ட மோடி முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்

264 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன