செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
ரோபோ ஷங்கரின் மகள் இந்த படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார். இந்த தகவலை சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி முன்னிலையில் ரோபோ ஷங்கரே மகிழ்ச்சியாக அறிவித்தார்.


அதோடு, ரோபோ ஷங்கரும் இந்த படத்தில் விஜய் நண்பராக நடிக்கலாம் என தெரிகிறது. சமீபத்தில் அஜீத் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆகியிருக்கிற விஸ்வாசம் படத்தில் அஜீத் மாமாவாக நடித்திருப்பார் ரோபோ… இவர்கள் காமெடி ஒர்க்கவுட் ஆகியிருப்பதால் விஜய் படத்திலும் ரோபோவுக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது.


இந்த படத்தில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பெண்கள் கிரிக்கெட் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா பெரும் வெற்றி பெற்று பலராலும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலைப் பணிகளை கனிக்கிறார். படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

695 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன