சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: Ags

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜி எஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜி எஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்* தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்ப...
படத்தைப் போலவே வைரலாகும் ‘லவ் டுடே’ மேக்கிங் வீடியோ!

படத்தைப் போலவே வைரலாகும் ‘லவ் டுடே’ மேக்கிங் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். இதைத்தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக் விரைவில் உருவாகவுள்ளது. இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 45 நிமிடங்கள் உள்ள இ...
வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
*வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்* வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பண...
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!! நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நட...
விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..! விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது. இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார். இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...
இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 பட டைட்டில் "பிகில்" அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் தளபதி63 என்றே அழைத்தனர். படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி முடிந்த நிலையில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக படத்தின் அப்டேட் இருக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு தரப்பு 21ம் தேதி, 22ம் தேதி இரண்டு முக்கிய அப்டேட் இருக்கும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு "பிகில்" என அறிவிக்கப்பட்டது. அதோடு விஜய் அப்பா மகன் என இரு வேஷத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியானது. தலைப்பு, போஸ்டர் இரண்டும் வெளியான சில நொடிகளில் இந்தியா முழுதும் இணையத்தில் வைரலானது. இந்த படம் தீபாவளி ரிலீஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....
15 நிமிடத்துக்கு 20 கோடியா? குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறது…

15 நிமிடத்துக்கு 20 கோடியா? குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறது…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில் தேவதர்ஷினி, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, வில்லன் வேடத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ பேசி வந்தார். இருமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்த நிலையில், ஷாருக்கான விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும், அவரது வேடம் க்ளைமாக்ஸின் போது 15 நிமிடங்கள் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த 15 நிமிடம் நடிப்பதற்காக ஷாருக்கான கேட்ட சம்பளத்தை அறிந்த ஒட்டு மொத்த கோலிவுட்டே வாய் பிளந்திருக்கிறது. ஆம், ‘தளபதி 63’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை சம்பளமாக ஷாருக்கான் கேட்க... ஷாக் ஆகி இருக்கிறது தயாரிப்பு தரப்பு. இருக்காதா பின்ன... 15 ந...
2020 பொங்கல் ரிலீஸ் ரேசில்  விஜய்63…!?

2020 பொங்கல் ரிலீஸ் ரேசில் விஜய்63…!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் இந்நேரத்தில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ₹70 கோடிக்கு வாங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், அதாவது விஜய் 63 திரைப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிட வேண்டும் என்பதே. தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் கோரிக்கைக்கு இன்னும் உறுதி அ...
பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு

பூஜையுடன் துவங்கிய விஜய் 63 படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி படம் உருவாகிறது. கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்துஜாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது ரோபோ ஷங்கரின் மகள் இந்த படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆகிறார். இந்த தகவலை சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் இயக்குனர் அட்லி முன்னிலையில் ரோபோ ஷங்கரே மகிழ்ச்சியாக அறிவி...
தளபதி 63 – அமெரிக்காவில் படப்பிடிப்பு

தளபதி 63 – அமெரிக்காவில் படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ...