செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

15 நிமிடத்துக்கு 20 கோடியா? குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறது…

 

அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தில் தேவதர்ஷினி, யோகி பாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, வில்லன் வேடத்திற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைக்க அட்லீ பேசி வந்தார். இருமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஷாருக்கான விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகவும், அவரது வேடம் க்ளைமாக்ஸின் போது 15 நிமிடங்கள் மட்டுமே வரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், இந்த 15 நிமிடம் நடிப்பதற்காக ஷாருக்கான கேட்ட சம்பளத்தை அறிந்த ஒட்டு மொத்த கோலிவுட்டே வாய் பிளந்திருக்கிறது.

ஆம், ‘தளபதி 63’ படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை சம்பளமாக ஷாருக்கான் கேட்க… ஷாக் ஆகி இருக்கிறது தயாரிப்பு தரப்பு.

இருக்காதா பின்ன… 15 நிமிட காட்சிக்கு ரூ.20 கோடி சம்பளமாக கேட்டால். காரணம் விஜயின் இந்தி மார்க்கெட் இந்த விலைக்கு தான் போகிறதாம். இதுதான் ஷாக் ஆனதற்கு காரணம்.

பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயின் சம்பளம் என்ன என்பது கொல்லிமலை ரகசியம். காத்துவாக்கில் உலவும் செய்திகளில் உண்மை இருந்தாலும் தயாரிப்பு நிறுவனமோ அல்லது சம்மந்தப்பட்டவர்களோ சொல்லாதவரை எல்லாம் ஒரு யூகமே.

குடுக்குறவன் கர்ணனா இருந்தாலும் கவச குண்டலத்தையா கேக்குறதுன்னு ஊர்ல ஒரு பழமொழி இருக்கு…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன