
இயக்குனர், நடிகர்,தயாரிப்பாளர் என பல முகங்களில் வலம் வந்த சேரன் தனது படங்களில் சமூக கருத்து கட்டாயம் இடம் பெறுவதை வழக்கமாக்கி இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக சேரன் படங்களை குடும்பத்தோடு எந்த சங்கடமும் இல்லாமல் பார்க்க முடியும் என்ற நிலை இதுவரை இருந்தது.
அப்படி குடும்ப நாயகனாக இருந்த சேரன் தமிழ் சினிமாவின் கால ஓட்டத்தில் தன்னையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தனது படங்களில் தேவை இல்லாமல் புகை பிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளையோ வைக்க மாட்டார்.
அதோடு சேரன் படங்கள் அனைத்துமே சென்சாரில் U சான்று பெற்ற படங்கள் தான்.
முதல் முறையாக சேரன் நடித்த ராஜாவுக்கு செக் படம் யு/ஏ சான்று பெற்றுள்ளது.
சேரன் இப்போது நடித்து முடித்துள்ள படம் ராஜாவுக்கு செக்… இந்த படத்தில் சேரன் புகைபிடிக்கும் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.
ஆனையோ பூனையோ காட்டுக்குள்ள இருக்குறவரைக்கும்தான் அது இஷ்டமா இருக்க முடியும்… காட்சிக்கு வந்துட்டா பூனை மீசை யானைக்கும் பொருந்தும்..!
