செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

இணையத்தை கலக்கும் தளபதி63 பட டைட்டில் “பிகில்”

 

தளபதி63 பட டைட்டில் “பிகில்”

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் தளபதி63 என்றே அழைத்தனர்.

படத்தின் ஷூட்டிங் பெரும் பகுதி முடிந்த நிலையில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டமாக படத்தின் அப்டேட் இருக்கும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து படத்தின் தயாரிப்பு தரப்பு 21ம் தேதி, 22ம் தேதி இரண்டு முக்கிய அப்டேட் இருக்கும் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை படத்தின் தலைப்பு “பிகில்” என அறிவிக்கப்பட்டது.

அதோடு விஜய் அப்பா மகன் என இரு வேஷத்தில் இருக்கும் போஸ்டரும் வெளியானது.

தலைப்பு, போஸ்டர் இரண்டும் வெளியான சில நொடிகளில் இந்தியா முழுதும் இணையத்தில் வைரலானது.
இந்த படம் தீபாவளி ரிலீஸ் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

598 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன