வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

 

பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..!

விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது.

இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார்.
இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார்.

இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் தயாரிப்பாளர் மீரான் என்பவர் பிகில் கதை திரைக்கதை அனைத்தும் தன்னுடையது. இந்த கதையை 2015ல் WGA என்று அழைக்கப்படும் ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்காவில் முறைப்படி பதிவு செய்து இருக்கிறேன்.
அந்த கதையைதான் விஜய் நடித்துள்ள பிகில் படமாக அட்லி இயக்கி வருகிறார் என்று திடீரென கொடி பிடித்துள்ளார்.
மேலும் இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் இயக்குனர் மீரான் புகார் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் யு சான்று கிடைக்கும் என எதிர் பார்த்த பிகில் டீமுக்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ளது.

ஒரே கதைக்கு 3 பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். திட்டமிட்டபடி தீபாவளிக்கு பிகில் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

– கோடங்கி

548 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன